யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் விசமிகளால் மீன்பிடி படகு மற்றும் கடற்றறொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நேற்றுக் காலை 8 மணியளவில் அம்பன் கொட்டோடை பகுதியில் கந்தன் சுரேந்திர ராசா என்பவர் புதிதாக கரை வலையை கொள்வனது செய்து நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடற்கரையில் எதோ எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்கு சென்றபோது படகு மற்றும் வலைகள் எரிந்து கொண்டிருந்துள்ளன.
ஊர் மக்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.
தீயில் எரிந்து நாசமாகிய படகு மற்றும் வலைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் என்றும் இது தொடர்பாக பருத்தித்துறை காவல் துறை நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal