ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா ஆகிய நாடுகளிலும் அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, அஸ்ட்ரா ஜெனேகா. இது, உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியது. இதுதான் இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட். இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து போட்டால் எப்படி இருக்கும் என்பதை ...
Read More »செய்திமுரசு
தமிழர்கள் எப்படி நம்புவது?
ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் ...
Read More »பொன்னாலையில் 2 வாள்கள் மீட்பு; ஒருவர் கைது
வட்டுக்கோட்டை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில், இன்று (27) காலை, இரண்டு வாள்களுடன், சந்தேகநபர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டை காவல் துறைனரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர் . இதன்போது, இரு வாள்கள் மீட்க்கப்பட்டதுடன், வாள்களை கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர். குறித்த சந்தேக நபருக்கு ...
Read More »2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு
022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவு திட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு ...
Read More »ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப ...
Read More »கடல் கடந்த தடுப்பு முகாம் முறையைத் தொடரும் ஆஸ்திரேலிய அரசு
ஆஸ்திரேலியா- நவுரு இடையிலான ஒப்பந்தம் தஞ்சக் கோரிக்கையாளர் பரிசீலனை முறையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார் நவுரு ஜனாதிபதி லைனெல் ஐங்கிமே. “ஆஸ்திரேலியாவால் நவுருவுக்கு கொண்டு வரப்படும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக கையாள்வதற்கான செயல்முறை உருவாக்கப்படும்,” என நவுரு ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
Read More »ஊசிக் கதைகள்
கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு…ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார்.காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி ...
Read More »அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் கைது
மெக்சிகோ வீரர்கள் 14 பேரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பகுதி அமைந்துள்ளது. இதில் பல இடங்களில் சரியான தடுப்பு வேலிகள் கிடையாது. இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த மெக்சிகோ வீரர்கள் 14 பேர் 2 வாகனங்களில் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க படையினர் விரைந்து வந்து 14 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ...
Read More »திலீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கின்றது தமிழர் தாயகம்!
தியாதீபம் திலிபன் அவர்களது 34 ஆவது நினைவேந்தலை பொது வெளியில் முன்னெடுக்க இலங்கை அரசு தடுத்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் வீடுகள் தோறும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எனது குடும்பத்துடன் அனுஸ்டித்த சூநினைவேந்தல் எமது உரிமை அதனை யாரும் தடுக்க முடியாதென தமது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பலரும் பிரசுரித்தும்வருகின்றனர். இதனிடையே தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய ...
Read More »தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்!
நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			