வட்டுக்கோட்டை காவல் துறை பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில், இன்று (27) காலை, இரண்டு வாள்களுடன், சந்தேகநபர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டை காவல் துறைனரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர் .
இதன்போது, இரு வாள்கள் மீட்க்கப்பட்டதுடன், வாள்களை கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக வட்டுக்கோட்டை காவல் துறை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்க்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal