022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு – செலவு திட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு சுகாதார அமைச்சின் கீழ் புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதைத் தவிர்ப்பதற்கும், தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களை நிறைவு செய்வதற்கும் கொள்கை முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய திட்டங்களை நிறைவு செய்ய முடிந்தால், அது நல்ல முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.