செய்திமுரசு

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், கடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, ; இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம். எந்தவொரு தீர்வையும் அடைய ...

Read More »

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்?

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ...

Read More »

யுத்தம், தீவிரவாத செயற்பாடுகளை விட மேசமான அச்சுறுத்தல் நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது!

இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவு பொருட்களிலும் புற்று நோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார். அந்த உணவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை. இது மேலும் அச்சத்திற்கு காரணமாகியது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மிக்க இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருவதாக எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மேலும் கூறுகையில் , கொவிட் தொற்றின் காரணமாக கடந்த வருடம் தமிழ் – சிங்கள புத்தாண்டை நாட்டு மக்களுக்கு கொண்டாட ...

Read More »

மியான்மரின் நிலைமை சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியான்மரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் மியான்மரின் தற்போதைய நிலைமை ...

Read More »

ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் ஏன் பயன்படுத்துகிறது?

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது. ஈழம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. தேசப்பற்று ; என்பது ; வெறும் தேர்தல் கால பிரசாரமாகவே காணப்படுகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். “முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ | Virakesari.lk” முன்னிலை சோசலிய கட்சியின் காரியாலயத்தில் ; ...

Read More »

புதிய புனர்வாழ்வு வர்த்தமானியை தடைசெய்யக் கோரி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட ; அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு ; தடை கோரி உயர் நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ; தாக்கல் செய்யப்பட்டுள்ளன நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் இந்த 5 மனுக்களும் ; இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வர்த்தமானியானது, அரசியலமைப்பின் 3 ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக கூறியே ...

Read More »

ஆயர் இராயப்பு ஜோசப்பும் தமிழ்த் தேசியமும்

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக்கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மையின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது. ஆயரின் சர்ச்சைத் ...

Read More »

திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபத் உள்ளது. திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட் ...

Read More »

புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி மறுப்பு

புத்தாண்டு தினத்தில் சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிடு வதற்கு அனுமதி வழங்கப்படாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்தார்.

Read More »

ஐம்பது பக்க ஆவணத்தினை பிரிட்டனின் தடைகள் தொடர்பான திணைக்களத்திடம் கையளித்தது சர்வதேச அமைப்பு

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் ...

Read More »