நுட்பமுரசு

மொழிகளின் ஒலி..

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்டறிய விருப்பமா? எனில் ‘லோக்கலிங்குவல்’ இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இந்தத் தளம் உலக வரைபடத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம். இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் தொட‌ங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பட்டியலிடப்படுகின்றன‌. ஒவ்வொரு மொழியிலும் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் ...

Read More »

இடுப்பு உயர ரோபோ ‘கேஸி!’

ரோபோவியலாளர்கள், ஆளைப் போலவே, ரோபோ, ஆளுயர ரோபோ என, படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபாடிக்ஸ் நிறுவனம், இடுப்பு உயர ரோபோவை, அதுவும், இடுப்பு வரை மட்டுமே உள்ள ரோபோவை உருவாக்கி ஆச்சரியப்படுத்தி உள்ளது. நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கேஸி’ என்ற இந்த ரோபோ, இரு கால்களும், சுற்றிலுள்ளவற்றை பார்க்கும், கேமரா கண்கள் மற்றும் பலவித உணர்வான்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது. கடை கண்ணிக்குப் போய் வருபவர்கள், இதை உடன் அழைத்துச் சென்றால், திரும்பி ...

Read More »

குறைந்த மின்சாரத்தில் குரல் ஆணை ‘சில்லு’

இனி, குரல் ஆணை மூலம் இயக்கப்படும் சாதனங்கள் அதிகரிக்கப் போகின்றன. இந்த தேவையை சமாளிக்க, அமெரிக்காவிலுள்ள, மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த சந்திரசேகரன் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு, ஒரு சிறப்பு சிலிக்கன் சில்லு ஒன்றை உருவாக்கியுள்ளது. தற்போது ஆப்பிளின், ‘சிறி’, கூகுளின், ‘ஹோம்’, அமேசானின், ‘எக்கோ’ போன்ற குரல் ஆணை மூலம் இயங்கி, குரல் மூலமே தகவல் தரும் தொழில்நுட்பங்கள் செயற்கை நுண்ணறிவு மூலமே இயங்குகின்றன. இவை இயங்கும் போது, ஒரு வாட் அளவுக்கு மின் சாரத்தை செலவிடுகின்றன. ஆனால், ஆனந்த சந்திரசேகரன் ...

Read More »

நீரை சுத்தமாக்க சூரிய சக்தி

சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, அதிக செலவில்லாமல், கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள, பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே, அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர்.தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும், பாலிஸ்டைரின் கட்டை மீது, கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி, அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் காகிதம், கீழிருந்து நீரை உறிஞ்சுகிறது. அதன் கரிய ...

Read More »

பூமி அளவில் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறித்த கோள்களில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விண்வெளிஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ...

Read More »

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: போட்டோ, வீடியோ மற்றும் எமோஜிக்களை செட் செய்யலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் ஆப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வாட்ஸ்ப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ...

Read More »

விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள்

விண்வெளி நிலையத்தை வேற்று கிரகவாசிகள் முற்றுகையிட்டதாக ‘நாசா’ அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 பேர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ‘நாசா’ ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 பொருட்கள் வட்டமிட்டு சுற்றுகின்றன. இதை பூமியில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த டைலர் கிளங்கனர் பார்த்தார். அதுகுறித்து அவர் கூறும்போது, சர்வதேச ...

Read More »

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக்குடன் மோத தயாரிக்கப்படும் கேலக்ஸி புக்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் புதிய கேலக்ஸி புக் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சாம்சங் சத்தமில்லாமல் உருவாக்கி வரும் புதிய சாதனம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் கேலக்ஸி புக் என்ற சாதனத்தை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி புக் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என ...

Read More »

முதன் முறையாக விண்வெளி ஆய்வகத்தில் முட்டைகோஸ் அறுவடை

விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை செய்யப்பட்டது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ ...

Read More »

தாலாட்டு பாடி தூங்க வைக்கும் ரோபோ தலையணை

வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இன்றைய அவசரகால வாழ்வில் தூக்கமின்மையால் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை சிலர் உட்கொள்வது உண்டு. இதற்கு தீர்வு காணும் விதமாக ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை வடிவத்தில் வளைவான இந்த ரோபோ, நீங்கள் மூச்சுவிடுவதை சீராகக் கண்காணிக்கிறது. அதன்மூலம் உங்கள் தூக்கத்தையும் சீராக்க இது உதவுகிறது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை தூங்கும் போது அருகில் வைத்து பயன்படுத்துவதால் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான மற்றும் ஆழமான தூக்கப் பெறலாம் என்கிறது ஆய்வு. ...

Read More »