Home / திரைமுரசு (page 9)

திரைமுரசு

வசந்தபாலன் படத்தில் வனிதா

இயக்குனர் வசந்தபாலன் தற்போது இயக்கி வரும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக ...

Read More »

முதல் சர்வதேச விருது… நயன்தாரா – விக்னேஷ் சிவன் உற்சாகம்

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. அந்த வகையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் ...

Read More »

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்

‘பீஸ்ட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ...

Read More »

வாழு, வாழ விடு…. அஜித்

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், ...

Read More »

உடல்நிலை குறித்து நடிகர் மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நடிகர் மம்முட்டி, தற்போது மலையாளத்தில் தனது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் ‘புழு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். அதற்கு ...

Read More »

என்னை மன்னிச்சிடு பவணி….யாஷிகா உருக்கம்

நடிகை யாஷிகா விபத்தில் பலியான தனது தோழி பவணி குறித்து முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ள யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் ...

Read More »

பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிக்பாஸ் பிரபலங்கள் நடித்துள்ள படத்துக்கு உதவ முன்வந்துள்ளார். மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா அறிமுக இயக்குனர்கள் ...

Read More »

வெப் தொடரில் அறிமுகமாகும் ஆர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ...

Read More »

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. “சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள். ...

Read More »

அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரசாந்த்தின் அந்தகன்

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்து வரும் பிரசாந்த் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். ...

Read More »