திரைமுரசு

காஜல் அகர்வால் திருமணப்பந்தத்தில் இணைந்தார்

மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஒளிப்படங்களும்  காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு என  இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக காஜல் அகர்வால் திகழ்கின்றார்.  தமிழில் கடைசியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் ...

Read More »

மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி?

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். ...

Read More »

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார். காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும், கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து ...

Read More »

மணிரத்னத்தின் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள்

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா’ என்ற படத்தில் பிரபலங்கள் பலர் சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளார்களாம். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். இதன் மூலம் நடிகர் அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகமாகிறார். கொரோனாவால் ...

Read More »

பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளாராம். சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். வேதாளம் ...

Read More »

வருங்காலக் கணவருடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் காஜல்!

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர்,  மாவீரன்,  நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விவேகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபரான கௌதம் கிட்ச்லுக்கும் வரும் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த வகையில்  தனது வருங்கால கணவருடனான புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

Read More »

”பிக் பாஸ் சீசன் 4” – போட்டியாளர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது நான்காவது செய்த ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது வாரத்தில் ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மூன்றாவது வாரத்தில் ஆஜித் வெளியேறி இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த எவிக்ஷன் பிரீ பாஸ் காரணமாக அவர் வெளியேற்றத்தில் இருந்து தப்பி விட்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் ...

Read More »

கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’

நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து நவம்பர் 4ஆம் திகதி ஓடிடியில் வெளிவரவுள்ள திரைப்படம்   ‘மிஸ் இந்தியா’. ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, உட்பட பலர் நடித்துள்ள இத் திரைப்படத்திற்கு  தமன் இசையமைத்துள்ளார். அந்தவகையில்   தமிழ், தெலுங்கு ஆகிய  இருமொழிகளில் உருவாகியுள்ள இத் திரைப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. எம்.பி.ஏ படித்த ஒரு பெண் வியாபாரம் ஆரம்பிக்க இருப்பதும் அதற்கு அவரது குடும்பத்திலிருந்தும் வெளியில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு அதையும் மீறி அவர் வியாபாரத்தில் எவ்வாறு  வெற்றி பெறுகிறார் ...

Read More »

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம். நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை ...

Read More »

சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து ...

Read More »