நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து நவம்பர் 4ஆம் திகதி ஓடிடியில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மிஸ் இந்தியா’.
ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, உட்பட பலர் நடித்துள்ள இத் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இத் திரைப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
எம்.பி.ஏ படித்த ஒரு பெண் வியாபாரம் ஆரம்பிக்க இருப்பதும் அதற்கு அவரது குடும்பத்திலிருந்தும் வெளியில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு அதையும் மீறி அவர் வியாபாரத்தில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதும் தான் இத் திரைப் படத்தின் கதை என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.
’மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ என்று மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு கீர்த்தி சுரேஷ் அதையே பிராண்டாக மாற்றி தனது வியாபாரத்தில் எப்படி முன்னேறுகிறார் என்பதை குறிக்கும் வகையிலான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Eelamurasu Australia Online News Portal