திரைமுரசு

சிறப்பான நாளை கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான்… குவியும் வாழ்த்துகள்

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் முக்கியமான நாளான இன்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் திருமண நாளை இன்று கொண்டாடி வருகிறார். இது இவர்களின் 25வது திருமண நாள். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன் தான் ...

Read More »

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்

விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய ...

Read More »

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

சாய் பல்லவியின் தங்கை பூஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். ...

Read More »

கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்

சினிமா இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம். தமிழ் திரைப்படத் துறையில் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்களின் பங்களிப்பு உள்ளன. ஆண் இயக்குனர்களுக்கு நிகராக பெண் இயக்குனர்கள் இடம்பெறவில்லை என்றாலும், வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள் பட்டியலில் சில பெண் இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர். டி.பி.ராஜலட்சுமி அவர்களில் முதன்மையானவர் டி.பி.ராஜலட்சுமி, தமிழ் சினிமாவிலும், தெலுங்கிலும் முதல் பெண் நடிகை இவர். தமிழ் சினிமாவில் ...

Read More »

ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், ...

Read More »

‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா?

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2 ’ படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளனர். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்கிற்கும் தயாராகிறது. ...

Read More »

சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘அமலா’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட “அமலா” திரைப்படமும் தேர்வாகி இருந்தது. இப்படம் திரையிடப்பட்ட போது, சில ...

Read More »

பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா’ என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பெரிதாக ...

Read More »

மீண்டும் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்?

எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியா ஆனந்த், தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம். பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். ...

Read More »

நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 4 நாட்கள் தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய நடிகர்- நடிகைகளை களம் இறக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது இந்தி நடிகர் சோனிசூட் பலருக்கு உதவி செய்து பிரபலமானார். அவர் மேற்குவங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அனில் ...

Read More »