திரைமுரசு

ராஷ்மிகாவின் நடிப்பு என்னை மலைக்க வைத்தது

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் திகதி வெளியாகி உள்ளது. ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் திகதி வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டி வருமாறு: “என் ...

Read More »

அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது – மதன் கார்க்கி

தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 2019-ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தலைவி ...

Read More »

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார். ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு ...

Read More »

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை கமலுக்கு பதில் பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா ...

Read More »

சோகத்தில் இருந்து மீட்க அதுதான் காரணம் – ஸ்ருதிஹாசன்

கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தன்னுடைய சோகத்தில் இருந்து மீட்க எது காரணம் என்பதை கூறியுள்ளார். கமல்ஹாசனின் வாரிசாக அறிமுகமானாலும் தனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘எழுத்து என்பது எப்போதுமே எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நான் பாடல்கள் எழுதுகிறேன், கவிதைகள் எழுதுகிறேன், சோகமான தருணங்களில் அவை நம்மை நாம் சிறப்பான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன என்று நான் நம்புகிறேன். நான் எழுதும் கவிதைகளுக்கும், கதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். ...

Read More »

‘தளபதி 66’ படத்தின் மாஸான

நடிகர் விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவதும், தயாரிக்கப்போவதும் யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ...

Read More »

சூர்யா இஸ் பேக்… ரசிகர்கள் உற்சாகம்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொண்டுள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 40 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா அதில் கலந்து ...

Read More »

தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட்

ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் தனுஷுடன் கேப்டன் ...

Read More »

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தற்போது படங்களில்   நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ...

Read More »

அந்த ஒரு ட்வீட்டுக்காக என்னையும் சங்கி என்றார்கள்… சத்குருவுடன் சந்தானம் கலந்துரையாடல்

ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்று பலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக சந்தானம் கூறினார். கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி வருகிறார். இதற்காக ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ஹேஷ்டேக்குடன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். இது இணையதளங்களில் வைரலானது. இதனை நடிகர் சந்தானம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்திருந்தார். ‘பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் ...

Read More »