திரைமுரசு

கோகோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்

வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி உள்ளார். தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் ...

Read More »

இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ...

Read More »

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு காணொளி ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு காணொளி அமைந்துள்ளது. நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த ...

Read More »

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட ...

Read More »

அட்லீயின் புதிய மாற்றம்…

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் புதிய மாற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ...

Read More »

தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ்படம் 2’ படத்தில் நடித்த இவர், கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தற்போது தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல ...

Read More »

உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்தில்லை

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். ...

Read More »

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ...

Read More »

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் ஒப்பந்தமான நித்யா மேனன்

பிரபல நடிகரின் படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததால், அவருக்கு பதில் நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, ...

Read More »

வெப் தொடரை தயாரிக்கும் ஏவிஎம் நிறுவனம்

ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக திரில்லர் கதையம்சம் கொண்ட வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு ...

Read More »