திரைமுரசு

சைக்கோ!

தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதை தான் ‘சைக்கோ’. கோயம்புத்தூரில் தொடர்ச்சியாகப் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கொலைகாரனை எந்த வழியிலும் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. இதனிடையே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எஃப்.எம்.மில் பணிபுரியும் அதிதி ராவைக் காதலிக்கிறார். அவரிடம் தன் காதலைச் சொல்லப் பலவழிகளில் முயல்கிறார். இறுதியில், நாளை என் எஃப்.எம். நிகழ்ச்சியைக் கேள். அதில் ஒரு க்ளூ சொல்கிறேன். அதைச் சரியாக ...

Read More »

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை!

பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து பாரத ரத்னா விருது பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் ...

Read More »

தாதா வேடத்தில் சந்தானம்!

இயக்குனர் ஜான்சன்.கே இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. சந்தானம் படங்களின் வசூலில் சாதனையாக அமைந்தது. சந்தானம் – ஜான்சன்.கே – ...

Read More »

சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்!

4-வது குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் நடிகர் அர்ஜுன் போர்வீரனாக நடிக்கிறார். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். ...

Read More »

ரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா?

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மதுரையில் ஒரு நகைக்கடை திறப்பு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் தந்தையுடன் அரசியலில் கரம் கோர்ப்பீர்களா என கேட்கிறீர்கள். அப்பாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சிறுவயதில் இருந்தே அவருக்கு சமூக அக்கறையும், அரசியல் ...

Read More »

கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்?

இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ், அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான ...

Read More »

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதை வைத்து படங்கள் ...

Read More »

எம்ஜிஆர் ஆகும் அரவிந்த்சாமி!

ஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்தும் எழுதி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ...

Read More »

தமிழில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள்? – மாதவன் பதில்

சென்னையில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாதவன், தமிழ்ப் படங்களில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகர் மாதவன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ‘தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டீர்களா’ என்ற கேள்விக்கு மாதவன், “தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை. ‘விக்ரம் வேதா’ திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏனென்றால் அது ஒரு பெரிய ...

Read More »

ஹரிவராசனம் விருதை பெற்றார் இளையராஜா!

இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். கடந்த வருடம் ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹரிவராசனம் விருது   இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. மேலும் ...

Read More »