திரைமுரசு

‘கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ அப்துல்கலாம் இசை அல்பம்

கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ என்ற வரிகளில் கவிப்பேரரசு வைரமுத்து எழுத்தில் உருவாகியுள்ள இசை அல்பம் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றி இருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை அல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் வருமாறு:- கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே இந்த இசை அல்பம் பற்றி இயக்குனர் வசந்த் கூறியதாவது:- காந்திக்கு ...

Read More »

`கோலி சோடா 2′ படக்குழுவில் இணைந்த தேசிய விருது நடிகர்

`கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தேசிய விருது வென்ற நடிகர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல ...

Read More »

`வேலையில்லா பட்டதாரி 2′ க்கு கிடைத்த ஒரு கோடி

சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் – அமலாபால் – கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். வேலையில்லாப் பட்டதாரி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் ...

Read More »

சண்டை காட்சியில் விபத்து: கங்கனா ரணாவத்துக்கு தீவிர சிகிச்சை

நடிகை கங்கனா ரணாவத் சண்டை காட்சியில் நடித்தபோது நெற்றியில் வாள் குத்தி படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். ...

Read More »

அரசியல் களத்தில் இணையும் ரஜினி – கமல்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. கருணாநிதி வயது மூப்பினால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த வெற்றிடத்தை ...

Read More »

`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்

விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலாக நாளை வெளியாக இருக்கும் “காதலாட” பாடலில் முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்’ தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் டீசர் சாதனைகளையும் முறியடித்துள்ளது. அனிருத் இசையில் ...

Read More »

குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த, குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் த்ரில்லர் கதையாக ஓவியா படம் உருவாகி வருகிறது. இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கிவரும் இந்த படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் ...

Read More »

சிபிராஜ் படம் படைத்த புதிய சாதனை!

 வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது நடித்து வரும் `சத்யா” படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார். யோகி பாபு, சதீஷ் நடிப்பில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ...

Read More »

நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பாணை!

கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் அழைப்பாணை அனுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியை சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற 6 ...

Read More »

தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

2009 – 2014 ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2009 – 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:- 2004-ம் ஆண்டு: 1 சிறந்த படம் முதல் பரிசு – ...

Read More »