ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்க நிறைய நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மணிகர்ணிகா’ என்ற இந்திப் படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் ராணி லட்சுமி பாயாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், ராதா கிருஷ்ணா ஜகர்லமுடியுடன் இணைந்து படத்தை இயக்கியும் உள்ளார். இந்தியில் இந்தப் படம் தயாராகியிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. எனவே, படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் ...
Read More »திரைமுரசு
இளையராஜாவை கவர்ந்த பின்னணி பாடகி!
இளையராஜா, தன்னை கவர்ந்த பின்னணி பாடகிகுறித்து பிறந்தநாள் விழாவில் தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூன் மாதம் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை அவருடைய பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து கொண்டார். அவரிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இளையராஜா அளித்த பதில்களும் வருமாறு:- “கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டா?” “படிக்கும் படிப்புக்கும், செல்லும் வேலைக்கும், ...
Read More »சீமான் – சத்யராஜ் நடிக்கும் கடவுள் 2
‘கடவுள்’ படத்தை இயக்கிய வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள்’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவரும் நிலையில், அதில் சீமான், சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். நாளைய மனிதன், அசுரன், ராஜாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி அருண்பாண்டியன், ரோஜா நடிப்பில் வெளியான கடவுள் படம் வெற்றி பெற்றதோடு தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது வென்றது. இந்த படத்தில் கடவுள் மனித அவதாரம் எடுப்பது போன்ற கதை இருந்தது. கடவுள் படத்தின் 2-ம் பாகத்தை வேலு பிரபாகரன், கடவுள் ...
Read More »புதிய தோற்றத்தில் விக்ரம்!
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகர்களில் முக்கியமானவர், விக்ரம். ‘சேது,’ ‘பிதாமகன்,’ ‘ராவணன்,’ ‘இரு முகன்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அடுத்து அவர், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் ம செல்வா இந்த படத்தை இயக்குகிறார். இதற்காக விக்ரம் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை படத்தில் காணலாம்.
Read More »அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ், ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை மணந்தார்!
புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ், ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு ...
Read More »ஜெயலலிதா வாழ்க்கைப்படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி!
விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்திகதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்திகதி தொடங்க இருக்கிறது. அதேபோல் இயக்குநர்கள் ...
Read More »திரை விமர்சனம்: கனா
கரூர் மாவட்டம் குளித்தலை யின் காவிரிப் பாசன விவசாயி சத்யராஜ். தன் மனைவி, மக ளுக்கு இணையாக விவசாயம், கிரிக்கெட்டையும் ஒருசேர நேசிக் கிறார். தந்தையின் மரணத்துக்குகூட கலங்காதவர், கிரிக்கெட்டில் இந் தியா தோற்றதும் கண்ணில் நீர் ததும்பி நிற்கிறார். அப்பாவைப் பார்த்து வளரும் மகளான ஐஸ் வர்யா ராஜேஷுக்கு அந்த கிரிக் கெட் ஆர்வம் அப்படியே தொற்றிக் கொள்கிறது. பெற்ற தாய் தடுக்க, ஊரார் ஒருபுறம் கைகொடுக்க, எதிர்ப்பும், அணைப்புமாய் கிரிக்கெட்டுடன் இரண்டறக் கலந்து வளர்கிறார் ஐஸ்வர்யா. காவிரிப் பாசனப் பகுதியில் விவசாயம் ...
Read More »கே.பி எனும் அபூர்வராகம்!
தமிழ் சினிமாவில், இயக்குநர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்! எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயவில்லை. தன் கதையையும் நல்ல கதையையும் மட்டுமே நம்பினார். அடுத்த தலைமுறைக்கு அதாவது எம்.ஜி.ஆர். சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் அவர். எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியது பாலசந்தர் படங்களே! எல்லோரும் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தபோது இவர் ...
Read More »திரை விமர்சனம்: மாரி 2
மாஸ் ரவுடியான தனுஷை (மாரி) இன்னொரு ரவுடி கும்பல் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறது. தனது துணிச்சலான வியூகத்தால் 100-வது முறையும் அதில் இருந்து தப்பிக்கிறார் தனுஷ். இதை அவரது நண்பர்கள் கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவிக்கு மாரி மீது காதல் மலர்கிறது. தான் ஒரு ரவுடி, அதுவும் எப்போதும் எதிரிகளால் குறிவைக்கப்படும் ரவுடி என்பதை மாரி பலமுறை கூறியும் விடாமல் காதலிக்கிறார் சாய் பல்லவி. இந்த சூழலில், தன் அண்ணனைக் கொன்ற ...
Read More »முதல் பார்வை: மாரி 2
சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே ‘மாரி 2’. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. ...
Read More »