அவுஸ்திரேலியமுரசு

தன்னந்தனியே அடைக்கலம் தேடி அவுஸ்திரேலியா சென்றுள்ள ஆப்கான் சிறுவர்கள்!

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார். பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என அமைச்சர் கரென் அன்ரூஸ் (karen andrews)தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை தாங்கள் பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது அவுஸ்திரேலியாவிற்கு தனியாக வந்த சிறுவர்ககளை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்ட அவர், மேலும் பலர் ...

Read More »

ஆஸ்திரேலியா: கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அகதிகள்

ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. “நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்கின்றன!

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 714 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 70 வயதுகளில் மற்றவர் 80 வயதுகளில். தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டவர்கள் வயது வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், 40 முதல் 49 வயதுடையவர்கள் விரைவில் தடுப்பூசி முடியும். மளிகை மற்றும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொற்று அதிகமாகப் பரவியுள்ள ...

Read More »

ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது

ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மெல்ட்டன் (Melton) எனும் பகுதியிலுள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது. குறித்த வீதிக்குத் தமிழ் பெயர் வருவவதற்கு அப்பகுதியில் எம்.ஏ.முஸ்தபா என்பராவார். இப்பகுதியில் பெருமளவு நிலங்கள் முஸ்தபாவுக்குச் சொந்தமானவை. அதனால் அவர் அப்பகுதியில் அமைந்த வீதிக்கு தமிழ் பெயர் ஒன்றை வைப்பதற்குத் தீர்மானித்து அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசு வட்டார தகவல்கள் படி, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர்.

Read More »

தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்

மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார். கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38.  ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார். திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது. இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து ...

Read More »

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. மெல்பேர்ணில் பேரணியில் கலந்துகொண்ட 4,000 பேர் காவல்துறையினரின் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றதால் காவல்துறையினர் அவர்கள் மீது மிளகுத் தெளிப்பைத் தெளித்தனர். அத்துடன் 218 பேரைக் கைது செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 7 காவல்றையினர் காயமடைந்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக 5,452 அவுஸ்ரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று ...

Read More »

சிறை போன்றதே ஆஸ்திரேலிய தடுப்பு மையங்கள்! -நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி

டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது அவரது விசா காலாவதியானதும், 2017 முதல் 2021 வரை குடிவரவுத் தடுப்பு மையங்களில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்பட்ட போது அங்கு அனுப்பப்பட்ட முதல் நபர் இவர் எனப்படுகின்றது. அதியுட்ச பாதுகாப்புடைய இத்தீவு தடுப்பு முகாம் சிறையை விட ...

Read More »

சிட்னியில் 5 கி.மீ தொலைவில் எங்கல்லாம் செல்லலாம்?

முடக்க நிலை அறிவிக்கப்பட்ட சிட்னி பெரு நகர் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களது உள்ளூராட்சிப் பகுதிகளில் மட்டும் அல்லது, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியும். உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Read More »

அவுஸ்ரேலிய பல்பொருள் அங்காடியினுள் தீடிரெனத் தென்பட்ட மலைப்பாம்பு!

அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காட்டியில் பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியிலிருந்து 3 மீற்றர் நீளம் கொண்ட விசமற்ற மலைப்பாம்பு ஒன்று வெளியேறியது. குறித்த பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் திருமதி அலதி என்ற பணியாளர் சக பணியாளர்களை எச்சரித்துவிட்டு குறித்த சம்பவத்தைப் படம் பிடித்தார். பின்னர் அவர் வீடு சென்று பாம்பைப் பிடிப்பதற்கான பை எடுத்து வந்து பாம்பைப் பிடித்தார். பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள புதர்பகுதியில் அப்பாம்பை விடுவித்தார்.

Read More »