சிறை போன்றதே ஆஸ்திரேலிய தடுப்பு மையங்கள்! -நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி

டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது அவரது விசா காலாவதியானதும், 2017 முதல் 2021 வரை குடிவரவுத் தடுப்பு மையங்களில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்பட்ட போது அங்கு அனுப்பப்பட்ட முதல் நபர் இவர் எனப்படுகின்றது.

அதியுட்ச பாதுகாப்புடைய இத்தீவு தடுப்பு முகாம் சிறையை விட மோசமானது என்றும் அங்கு எவ்வித இணைய வசதியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் Taufoou தெரிவித்திருக்கிறார். அதே போல், ஆஸ்திரேலியாவின் வில்லாவுட் தடுப்பு மையமும் சிறையை விட மோசமானது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த தடுப்பு மையங்கள் சிறை போன்றவை, தனிமைப்படுத்தப்பட்டவை மற்றும் குற்றவாளியின் சுதந்திரம் மற்றும் சுதந்திரம் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதி Weinstein தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் மோதல் தொடர்பன வழக்கில் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Taufoou தடுப்புக்காவலில் இருந்த நேரத்தை சிறையில் இருக்கும் நேரத்துடன் சமப்படுத்திய நீதிமன்றம் அவரது தண்டனையை சுமார் நான்கு ஆண்டுகளாக குறைத்திருக்கிறது. அத்துடன் அவர் பரோல் பெறவும் தகுதியுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.