அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவின் தற்காலிகவிசா! மறைந்துள்ள ஆபத்துகள்!!

பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியும் கிறீன்கட்சியும் இச்சட்டமசோதாவை கடுமையாக எதிர்த்தபோதும் வேறு தனித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பகீரத பிரயத்தனத்தின் மத்தியில் ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அகதிகளாக இனங்காணப்படுவோருக்கு 3 ஆண்டுகள் தற்காலிகவதிவிட உரிமையும் அல்லது 5 ஆண்டுகள் துாரபிரதேசங்களில் தொழில்செய்து வாழும் உரிமையும் வழங்கப்படலாம். குறித்த விசாக்கள் காலாவதியாகும்போது அவர்கள் மீண்டும் தாம் அகதி என்பதை நிருபிக்கவேண்டும். இதனால் தமது நாடுகளில் கடுமையான ஆபத்துகளில் தப்பிவந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் நிச்சயமற்றநிலையை வழங்குவதன் மூலம் அவர்களை மீண்டும் உளரீதியாக கொடுமைப்படுத்துவதாக அகதிகளுக்கான சட்டத்தரணி டேவிட் மானே ...

Read More »

மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை

அவுஸ்திரேலியாவில் மெல்பேணில் தியாகி திலீபன் கலைமாலை நிகழ்வு  மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் அமைதியான கௌரவமான வாழ்வுக்காக, அறவழியிலான போராட்டத்தின் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 – 09 – 2011 அன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியேற்றல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மெல்பேண் பிறிஸ்ரன் நகர மண்டபத்தில், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய தேசிய கொடியை திரு. அல்பிரட் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ ...

Read More »