மெல்பேர்ன், Springvale-இலுள்ள வங்கிக்கு தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் இந்த வழக்கை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தீ விபத்தில் 12 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி Springvale Commonwealth வங்கிக்குச் சென்ற Nur Islam என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர், வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்தமையால் ஆத்திரமடைந்து குறித்த வங்கிக்கு தீ மூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வங்கிக்கு சுமார் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைக்கும் முனைப்பில் அவுஸ்திரேலிய அரசு!
Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றி அமைக்கப்படவுள்ளது. ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும். அத்துடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
Read More »அவுஸ்ரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி
அவுஸ்ரேலியாவில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி, இரண்டு சகோதரர்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் மாடல் ...
Read More »சுறா மீன் குட்டிக்காக தற்காலிக உப்பு நீர்த்தொட்டி!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரையில், சுறா மீன் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த சுறா மீன் குட்டியை கடலில் கொண்டுசென்று விட்டனர். ஆனால், அது மீண்டும் கரையைத் தேடி வந்துள்ளது. இவ்வாறு 7 முறை கடலில் விடப்பட்டும், சுறா கரை ஒதுங்கியதால், அதனை காப்பாற்ற தற்காலிக உப்பு நீர்த்தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உப்பு நீர்த்தொட்டியில் சுறா மீன் குட்டி விடப்பட்டுள்ளது. எனவே, அந்த சுறாவை உப்பு நீர்த்தொட்டியில் பாதுகாத்து, ஓரிரு நாட்கள் கண்காணித்த பின் ஆழ்கடலில் விட, கடல் ...
Read More »அவுஸ்திரேலியாவில் R U OK தினம்!
அவுஸ்திரேலியாவில் 14 ஆம் திகதி R U OK? தினம் கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் அருகில் இருக்கும் ஒருவர், அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள். “நீங்கள் நலமா?” R U OK என்ற ஒற்றைக் கேள்வியால் துயரங்கள் விலகிச் செல்லலாம். ஒருவர் மீதுள்ள அன்பில்பால் நாம் கேட்கும் கேள்விகள் மனதை ஆற்றுப்படுத்த பெரிதும் உதவலாம் இல்லையா..?
Read More »சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது!
சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் 500 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் சிட்னி பல்கலைக்கழகம் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்பு பெறுவது இலகு என்பது தொடர்பில், QS Graduate Employability Rankings பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வியின்போது வேலை செய்வதற்கேற்ற தகுதிகளை வளர்ப்பது, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய பின்னர் விரைவாக வேலை கிடைத்தல் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மீது இருக்கும் மதிப்பு போன்றவற்றை பிரதானப் படுத்தப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...
Read More »அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பற்றாளர் பொன். சத்தியநாதன் என்ற பெருமனிதன் மறைவு!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார். இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு வள்ளுவமே தமிழரின் மதமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டு தான் செல்லும் வீடுகளுக்கு வள்ளுவரின் ...
Read More »அவுஸ்ரேலியா நீச்சல் வீரருக்கு 12 மாதம் தடை!
ஊக்க மருந்து விதிமுறை’ப்படி அவுஸ்ரேலிய வீரர் ஜெரார்டு பூர்ட் தனது இடத்தை குறிப்பிடாததால் 12 மாதம் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் முன்னணி நீச்சல் வீரர் ஜெரார்டு பூர்ட். இவர் லண்டனில் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோவிலும் கலந்து கொண்டார். 9 ஆயிரம் மீட்டர் வரை முதல் இடத்தில் வந்த பூர்ட், அதன்பின்னர் பின்தங்கி இறுதியில் 20-வது இடத்தைப் பிடித்தார். நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரின் நிறம் மாறியதே தனது தோல்விக்கு ...
Read More »அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்
அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் மைக் டன்கிரீட், சக அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா துறை தலைவராக கடந்த 1999-ம் ஆண்ட் முதல் மைக் டன்கிரீட் பதவி வகித்து வந்தார். அவர் மீது கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் போனில் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். அந்த புகாரில் மைக் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக ...
Read More »கங்காரு இறைச்சியை அதிகம் உண்ணுங்கள்: – மக்களுக்கு அவுஸ்ரேலிய அரசு அறிவுறுத்தல்
கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி அவுஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்ரேலிய வின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கங்காருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருப்பதால் அந்நாட்டு ...
Read More »