Home / குமரன் (page 30)

குமரன்

பரிசோதனை வர்த்தமானி அறிவித்தல்

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை, ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு 2000 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Read More »

மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா – பிரசன்னா

நட்சத்திர ஜோடியாக இருக்கும் சினேகா – பிரசன்னா தம்பதியினர், தங்களது மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா – சினேகா ஜோடி. இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று விஹான் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை பிரசன்னா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஒரு நாள் நீ ...

Read More »

நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ...

Read More »

சுகாதார அமைச்சு கைமாறுகிறது?

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

Read More »

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் ...

Read More »

சூர்யா படத்தில் இணைந்த ராதிகா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண்விஜய்யின் 33-வது படம் ஆகிய படங்களில் நடித்து வந்த ராதிகா தற்போது சூர்யா படத்தில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ...

Read More »

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று முன்திகம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்த கர்ப்பிணிப் பெண் திருமணம் முடித்து ஒரு ஆண்டு என்றும் அவர் சம்பவதினம் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்து நிலத்தில் சரிந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் ...

Read More »

வரலாற்றைத் தெளிவாக்கும் தொல்லியல்

தமிழ்நாட்டில் 1961-ல் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதற்கு இது 60-வது ஆண்டு. அதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒருபுறம் கோரிக்கை எழுந்துவரும் நேரத்தில், ‘தொல்லியல் ஆய்வுகளே வீண்’ என்ற விமர்சனம் இன்னொருபுறம் முன்வைக்கப்படுகிறது. 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் கிரேக்க வரலாற்றில் ‘சந்தரகொட்டாஸ்’ என்று சொல்லப்படுவது இந்தியாவை ஆண்ட சந்திரகுப்த மெளரியர் என்ற பேரரசரின் பெயர்தான் என்பதைக் கண்டறிந்து கூறினார். 1886-ல் சென்னை அரசாங்கம் ...

Read More »

ஒலிம்பிக் 2020 : ஆஸ்திரேலியாவின் சாதனைப் பயணம்!

ஒரு பக்கம் உலகமே கொரோனா வைரசுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, பெரும் பரபரப்புகளுக்கிடையே, ஒரு வருட காத்திருப்பிற்கு பின்பு, பார்வையாளர்களின் கைதட்டல்களும், ஆராவாரங்களும் இல்லாமல், டோக்கியோவில், ஒலிம்பிக்ஸ் 2020ல், 3988 வீரர்கள் 52 விளையாட்டுகளில் தங்களுக்குள்ளே போட்டி போட்டனர். ஐப்பான் நாட்டின் ஆதிக்குடிகளின் பண்பாட்டை விவரிக்கும் வண்ணம் நடனங்களை ஆடி, ஆகஸ்ட் 8ம் தேதி ஒலிம்பிக்ஸ் 2020 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, உலக அரங்கில் தன்னை பெருமையான இடத்தில் ...

Read More »

காலத்தால் கனிந்த கலைஞன்!

அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்குமான இடைப்பட்ட புள்ளியிலிருந்துதான் தனது உரையாடலை ப்ரகாஷ் தொடங்குவார். அன்றைக்கு தஞ்சைப் பெரிய கோயில் புல்வெளியில் காதர்பாட்சாவுடைய ஆர்மோனிய வாசிப்பில் மயங்கிப்போன வெள்ளைக்காரர்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டார்கள் என்று பேச ஆரம்பித்தார். அன்றைய சாயுங்காலப் பேச்சு இரவு வரைக்கும் நீண்டு ஆர்மோனியம், ஆர்மோனிய இசைக் கலைஞர்கள் என்று ஓடிக்கொண்டிருந்தது. ப்ரகாஷ் ஓர் உரையாடல் கலைஞன். எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்குப் பிற்பாடு, தமிழ் ...

Read More »