குமரன்

யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்” எனக் கூறியிருக்கின்றார் யாழ். அரசாங்க அதிபர் க.மகேசன். தற்போதைய யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க யாழ் மாவட்டஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ...

Read More »

ஆஸ்திரேலிய அரசின் உத்தரவு: நிர்கதி நிலையில் அகதிகள்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் போல ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது முடங்கிக் கிடந்த ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது. அதே வேளை, இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகளை நிர்கதி நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. இந்த பெருந்தொற்று சூழலில் சொந்த நாட்டு மக்களே அல்லாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து ...

Read More »

20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. அது  முன்னரும்  தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி அல்ல. ஜனாதிபதி தேர்தலின் போதும் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்தே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுடைய தமிழ் முகவர்கள் இல்லையென்றால் 150 ஆசனங்கள் கிடைத்திருக்காது. எனவே இருபதாவது திருத்தத்துக்கு முன்னரும்  அவர்கள் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளால் பெற்ற ...

Read More »

’20’ ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியும், வாக்களித்தும் இருக்கத்தக்கதாக, கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து, வெள்ளிக்கிழமை செயலாளர் நிசாம் காரியப்பரின் பங்குபற்றுதலுடன் கூட்டமொன்றை நடத்தினார். அரசியலமைப்பின் 20ஆவது ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகள்……!

2020- 21 நிதியாண்டின் புலம்பெயர்வு திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்திருக்கிறது. ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்த மாற்றத்தை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கடந்த ஆண்டு திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு 1,08,682 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 79,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலும் வேலைச்செய்ய அனுமதிக்கும் Skilled Independent விசாவுக்கான இடங்கள் 6,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், நிறுவனங்கள் ...

Read More »

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்: கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருடாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்குகிடைத்த தகவலின்படி சந்தேகத்தில்பேரில் பலரை தேடிப்பிடித்து ...

Read More »

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த தம்பதி

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது ஐந்து வயது பெண் குழந்தை, மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து ...

Read More »

சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து ...

Read More »

20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்!

“சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் போக்கு மட்டுமல்ல சர்வாதிகாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 20ஆம் திருத்தச் ...

Read More »

தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள்

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அப்படத்தின் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே நிறைவடைந்தது. ...

Read More »