குமரன்

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவை டிசம்பர் 15 வரை ஒத்திவைத்த ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் இங்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இந்நடவடிக்கையை மேலும் இரு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More »

தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி

4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களில் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம். பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ...

Read More »

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?

தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

Read More »

மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுங்கள்

மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை அரசு இந்தியாவிடமே கொடுக்க வேண்டும். மாறாக சீனாவிடம் கொடுத்தால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். இதுவே எமது நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்பவர். மன்னாரில் இருக்கின்ற எரிவாயு ...

Read More »

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலை தாண்டி நிலஅளவைத் திணைக்களத்தினரை விரட்டியடித்த மக்கள்

கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றைய தினம் மாதகல் கிழக்கு ஜேஃ150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ இரண்டு கடற்படை தளத்திற்கான காணி சுவிகரிப்பு முயற்சி மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் காணி அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தையும் குறித்த காணிக்குள் இறங்க விடாமல் குறித்த காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பை தமது வெளிப்படுத்தினர். குறித்த பிரதேசத்தில் இருந்து நில அளவை திணைக்களத்தினர் விலகி இருந்தாலும் சற்று தூரத்தில் ...

Read More »

வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ?

ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும்  ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை.அதுமட்டுமல்ல அப்படி ஒரு ...

Read More »

Omicron வைரஸ் திரிபு: ஆஸ்திரேலிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

• சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. • திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள ஒன்பது நாடுகளில் இருந்து வந்த 54 பயணிகள், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். • சுகாதார அதிகாரிகள் பிரதமர் Scott Morrison-இடம் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும், தற்போதைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

Read More »

ஓமைக்ரான் ஆபத்தானதா? உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள ஐந்து முக்கியத் தகவல்கள்

ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஓமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இது தொடர்பான WHO அறிக்கையில் ...

Read More »

அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால்

சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை திரைப்படம் ...

Read More »

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை! – நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம்

யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். புனித அந்தோணியார் சிற்றாலயத்திலுள்ள சொரூபங்கள் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர். அவர் ஒரு மனநோயாளி. நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார். நாங்கள் நீண்ட முறை அவர்களை ...

Read More »