குமரன்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: போட்டோ, வீடியோ மற்றும் எமோஜிக்களை செட் செய்யலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் ஆப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வாட்ஸ்ப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ...

Read More »

லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி

லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலியானார்கள். ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் லிபியா அருகே கடலில் மூழ்கி இறந்தனர். ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் அந்த நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் சென்று அங்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். இவ்வாறு படகில் செல்லும் போது ...

Read More »

“எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார். அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில், தாய், “நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் ...

Read More »

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதை – பிரசுரம் வெளியீடு!

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின்  போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை “விதை குழுமம்”தாயாரித்திருக்கின்றது. இதனை  யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இனிவரும் நாட்களில் இந்த  மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அழுத்தத்தை உருவாக்கும் வகையிலும் இப்பிரசுரம் தாயாரிக்கப்பட்டிருக்கிறது ...

Read More »

விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள்

விண்வெளி நிலையத்தை வேற்று கிரகவாசிகள் முற்றுகையிட்டதாக ‘நாசா’ அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 பேர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ‘நாசா’ ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 பொருட்கள் வட்டமிட்டு சுற்றுகின்றன. இதை பூமியில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த டைலர் கிளங்கனர் பார்த்தார். அதுகுறித்து அவர் கூறும்போது, சர்வதேச ...

Read More »

நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன் தான் முதலமைச்சராவதற்கு ரசிகர்கள் விரும்புவதாக கூறியுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் ...

Read More »

நில மீட்புக்காக போராடும் சிறார்கள்! பத்மினி சிதம்பரநாதன்

நில மீட்புக்காக போராடும் சிறார்கள் தாம்படும் அவலங்களை பாடல்களாக கோஷங்களாக கூறி அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன். கேப்பாப்பிலவு நில மீட்புக்காக சிறார்கள் கூட தாங்கள் படுகின்ற அவலங்களை மிகத் தெளிவாக பாடல்களாகவும் கோஷங்களாகவும் கூறி தங்கள் நிலங்களை விடுவிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் சிறார்கள் தங்கள் அவலங்களை வெளிப்படுத்தியதில்லை. மக்களின் மனிதாபிமான பிரச்சினையை உணர்ந்து சிறுவர்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி ...

Read More »

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக்குடன் மோத தயாரிக்கப்படும் கேலக்ஸி புக்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் புதிய கேலக்ஸி புக் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சாம்சங் சத்தமில்லாமல் உருவாக்கி வரும் புதிய சாதனம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் கேலக்ஸி புக் என்ற சாதனத்தை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி புக் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என ...

Read More »

கமல்ஹாசன் கவிதை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று ...

Read More »

அவுஸ்ரேலிய அரசு வழங்கும் சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள்

அவுஸ்ரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கும் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள். https://www.australiaawardssouthwestasia.org/

Read More »