குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் அறிமுகமாகும் முதல் படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன், கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான மைக்கேல் தங்கதுரை, சார்பட்டா பரம்பரை பட புகழ் சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். ஹைப்பர்-லிங்க் திரைக்கதையில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தை பிளாக்வோல் பிக்சர்ஸ் சார்பில் மணிரத்தினம் வழங்க இருக்கிறார். குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் இப்படம் ...
Read More »குமரன்
குட்டிமணியின் கண்களால் பிரியந்தவைப் பார்த்தல்?
“ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமில்ல அண்மை வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல் ...
Read More »நாளை சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்- ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி
• நாளை டிசம்பர் 15 முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். • நியூ சவுத் மாநிலத்தில் கடந்த 10 வாரங்களில் இல்லாதளவுக்கு அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாளை, டிசம்பர் 15 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாநிலம் தயாராக உள்ளது. • விக்டோரியாவில் mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உருவாக்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
Read More »பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழப்பு!
பெட்ரோல் டேங்கர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஹெய்தி அரசு அறிவித்துள்ளது. கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை சந்தித்தது. அப்போது அந்த லாரியில் இருந்த வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக ...
Read More »இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதன் உறுப்பினராக வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார்
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் பிணையில் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 வயதான பாலகிருஸ்ணன் ரதிகரன் என்ற இளைஞனுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று (14.12.2021) திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார். மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக ...
Read More »அமெரிக்காவின் அழைப்பும் இந்தியாவின் அழைப்பும்
அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன.இந்த இரண்டு அழைப்புகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். ஒரு பிராந்திய பேரரசும் உலக பேரரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் அழைக்கின்றன என்று சொன்னால் இரண்டு பேரரசுகளுக்கும் தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் எதற்காகவோ கையாள வேண்டிய ஒரு தேவை வந்து விட்டது என்று பொருள்.அதேசமயம் இந்தியாவின் அழைப்பு எப்பொழுது வந்திருக்கிறது என்ற காலகட்டத்தையும் இங்கு பார்க்க ...
Read More »உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த ...
Read More »வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே விஜய்யுடன் ’பைரவா’ ...
Read More »மன்னாரில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், இன்று (13) காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கை இன்று (13) காலை இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த பகுதிக்கு வனவளத் திணைக்களத்தினர் காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர். இதன்போது அங்கு ஒன்றுகூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக, காணி அளவிடும் பணிகளை ...
Read More »