குமரன்

காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, சாதாரண பிரஜையான தனது காதலரை ‌விரைவில் கரம் பிடிக்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் ‌தனது திருமண நிச்சயார்த்தம் ‌நடக்கவுள்ளதாக மகோ மகிழச்சி பொங்க அறிவித்துள்ளார். ‌ ஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் தான் இளவரசி மகோ. அர‌ச பரம்பரை வழக்கப்படி அவரை ஜப்பானிய மக்கள் இளவரசி அகிஷினோ என அழைத்து வருகின்றனர். இந்த இளவரசி பட்டம், மரியாதை அனைத்தும் இன்னும் சில மாதங்களுக்கு ...

Read More »

உடலில் ஊடுருவி நோயின் தன்மை சொல்லும் புதிய கமரா!

உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கமரா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு இதை கண்டுபிடித்துள்ளது. தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி ...

Read More »

ஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா!

ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமெக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய லட்சுமணனே தெலுங்கில் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவி ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்!

வங்காளதேசத்தில் அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வங்காள தேச காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் அவுஸ்ரேலியா வீரர்கள் கடுமையான காவல் துறை ...

Read More »

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கௌரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை தனது இல்லத்தில் கௌரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சிறுநீரை குடித்து 140 கி.மீ நடந்த வாலிபர்!

அவுஸ்ரேலியாவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பி வாலிபர் குடிக்க தண்ணீர் இல்லாததால் 140 கி.மீ. வரை சிறுநீரை குடித்து நடந்து வந்தார். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் தாமஸ் மேசன் (21). டெக்னீசியன் ஆன இவர் தனது காரில் அவுஸ்ரேலியாவின் தெற்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் குறுக்கே ஒரு ஒட்டகம் திடீரென கடந்து சென்றது. எனவே அதன் மீது மோதாமல் இருக்க அவர் காரை திருப்பினார். அதையடுத்து அக்கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அப்பகுதிஅவுஸ்ரேலியாவின் மிகவும் ...

Read More »

உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு!

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் ஆளில்லா விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த ...

Read More »

`அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்த பியா பாஜ்பாய்!

அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்தது குறித்து நடிகை பியா பாஜ்பாய் மனம் திறந்தந்திருக்கிறார். எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ”இந்த படமும், இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக ...

Read More »

போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும்! – இரா.சம்பந்தன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன என்பது உண்மை. அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் ...

Read More »

பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு பெண்களின் கைகளில்!

பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு  பெண்களின் கைகளில் ,அவுஸ்தரேலியாவின் 53-ஆவது பாதுகாப்புத் துறை அமைச்சரான மரைஸ் பெய்ன், பாதுகாப்புத் துறையை கவனித்துக்கொள்ளும் முதல் பெண் அமைச்சராவார். இந்திராவுக்குப் பிறகு நிர்மலா இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் ஏற்கனவே வகித்து வந்த வர்த்தக துறை அமைச்சர் பதவியையும் கவனித்துக்கொள்வார். பாதுகாப்புத் துறைகளில் வழக்கமாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், பல நாடுகள் தங்களது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பெண்களிடம் ...

Read More »