குமரன்

புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும்!

புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால்  தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம்  என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க வலிமையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே  எனது நோக்கம் ...

Read More »

“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது”!

“என்னை பலவந்தமாகவும் முறையற்ற விதத்திலும் பதவி நீக்க முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள ...

Read More »

சவுதி இளவரசர் உத்தரவுப்படியே கஷோகி கொல்லப்பட்டார்!

துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது. சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு ...

Read More »

சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்!

இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது. ‘ஜனாதிபதி எதிர் பிரதமர் ‘ என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும்  ஆசிரிய தலையங்கத்தில் ‘இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பாதுகாப்புப் படைகள் தூண்டப்படக்கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள்.   இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் ...

Read More »

காற்றின் மொழி!-விமர்சனம்

பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே ‘காற்றின் மொழி’. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த ...

Read More »

‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு ஆராத்யா ’’ -அபிஷேக் பச்சன்

வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன். பாலிவுட்டின் பிரபலத் தம்பதி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். இருவரும் இன்று (நவ.16) மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், ”குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயைக் கொண்டாடாமல் முடிவடையாது. மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பைச் செலுத்துவதற்கு, அவளைப் பார்த்துக் கொள்வதற்கு.. எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு…! என்னுடைய திருமதிக்கு – வாழ்க்கையின் ...

Read More »

கஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை!

கஜா புயலின் எதிரொலியானது மன்னார் மாவட்டத்தில்  தொடர் மழையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் ஆனது நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை காரணமாக கடந்து செல்லும் எனவும் சில நேரங்களில் புயலின் தாக்கம் வழைமையை விட அதிகமாக காணப்படும் எனவும் அதனால் மன்னார் மாவட்ட மக்களை தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் ...

Read More »

மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது!

இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ...

Read More »

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி  திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ...

Read More »