குமரன்

ஸ்மார்ட் எல்இடி

சாலையில் பாதசாரிகள் கடக்குமிடத்தை ஸ்மார்ட்டாக உருவாக்குகிறது லண்டன். சிக்னல் விழுந்ததும் பாதசாரிகள், சைக்கிள்களுக்கான ஜிப்ரா கோடுகள் சாலையில் எல்இடியாக ஒளிரும். சிக்னலுக்கு பின் சாலையில் அடையாளம் இருக்காது.

Read More »

ஜிம்பாப்வே அதிபர் முகாபே, உலக சுகாதார நிறுவன பதவியில் இருந்து நீக்கம்

பலத்த எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தொடர்ந்து ராபர்ட் முகாபேயை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேபிரியேசுஸ் அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே அதிபராக ராபர்ட் முகாபே (83) கடந்த 37 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இவரை நல்லெண்ண தூதராக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நியமித்தது. அதற்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் புதிய டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் காபிரியேசுஸ் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசு, கனடா பிரதமர், ஐ.நா. கண்காணிப்பு குழு, ...

Read More »

நெதர்லாந்தில் உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம்

நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3.டி பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ...

Read More »

சின்னையாவின் கதி இன்று தெரியும்!

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், நாளையுடன் ட்ராவிஸ் சின்னையாவின் பதவி நீடிப்புக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ...

Read More »

3டி கேக்

உக்ரைனைச் சேர்ந்த தினாரா காஸ்கோ என்பவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் கேக் தயாரிக்கிறார். கம்ப்யூட்டரில் மாடலை உருவாக்கிக் கொண்டு தான் வடிவமைத்த கருவியைக் கொண்டு கேக்குகளை உருவாக்குகிறார்.

Read More »

`2.0′ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து!

டுபாயில் நடைபெற இருக்கும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் திகதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ...

Read More »

டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்

கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ...

Read More »

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதாவது நமது மனதின் நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் கண்ணாடி தான் நமது முகம். ஒருவர் சந்தோஷமாக இருந்தால், அவரது முகம் மலர்ச்சியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புன்னகை நிறைந்ததாக இருக்கும். அதுபோல் அவர் சோகமாக இருந்தால் அவரது முகம் ‘களை இழந்து’ சோகத்தை வெளிப்படுத்துவதாக காட்சியளிக்கும். பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் ...

Read More »

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ சிப்பாய் பலி

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணு சிப்பாய் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய்  கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவ சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை வைபை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதிக்கும் என தெரியவந்துள்ளது. வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைபை மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிழை மூலம் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்போரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியும் என்பது தெரியவந்துள்ளது. புதிய வைபை பிழை KRACK என அழைக்கப்படுகிறது. இந்த பிழையானது WAP2 ப்ரோடோகால் மீது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சேவைகள் மட்டுமின்றி அனைத்து வகையான நவீன வைபை ...

Read More »