ஆஸ்திரேலிய அணியில் டேவிட்ர் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாததற்கு சமம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதில் பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் கிரிக்கெட் விளையாடத் தடையும், ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டுதடையும் விதிக்கப்பட்டது. இதில் வார்னர், ஸ்மித்துக்கு தடை ...
Read More »குமரன்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பு!
நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து அவர்கள் வாக்களித்துள்ளதாக ஆர். சம்பந்தன் கூறியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது
Read More »2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்!
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் ...
Read More »பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசாங்கம்!
சிறிலங்கா ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை ...
Read More »6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது!
அஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காரை ஏற்றி 6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெல்பர்னின் போர்க் ஸ்டிரீட் பகுதியில் இந்த (Bourke Street) சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயது ஜேம்ஸ் கர்கஸூலஸ் (James Gargasoulas) என்பவர் வீதியில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி பலரை கொலை செய்தார். அதில் 6 மாத சிசு உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் மீது 33 குற்றங்கள் சுமத்தப்பட்டன. எனினும் ஜேம்ஸ் தனது குற்றங்களை மறுத்துள்ளார். ...
Read More »ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’!
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ‘காற்றின் மொழி’ படத்தை முதல்நாளே பார்க்க இருக்கின்றனர் நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியைச் சேர்ந்த பி.எட். மாணவிகள் 160 பேர். இதற்கான ஏற்பாட்டைக் கல்லூரி நிர்வாகமே செய்திருக்கிறது. இதுகுறித்து கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது… “நடிகை ...
Read More »வியாழேந்திரனுக்கு பத்தில் வியாழனா?-காரை துர்க்கா
அன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு. அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்) எல்லாம் தெரியும்” என, அடுத்தவர் பதில் அளிப்பதும் உண்டு. இதே நிலைமையிலேயே, இன்று எமது நாடும் உள்ளது. நாளை (14) என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, அகிலமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனால், அது கூடப் பொய்த்துப் போய் விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. அந்தளவுக்கு, ஒக்டோபர் 26 மாலை, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் அதிர்வுகள், ...
Read More »காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்!
காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ உயிரிழந்தார். ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.
Read More »பொதுத் தேர்தலில் நாமல் குமார “மொட்டில்” போட்டி!
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு இயக்குனர் நாமல் குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வழங்கியதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார். சுற்றாமலை பாதுகாக்கவும் ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கவுமே தான் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் ...
Read More »மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று (12) எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104 ஆவது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11) ஆகிய விடுமுறை தினங்களைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (12) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று (12) அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை. அத்துடன் எதிர்வரும் இரு வார காலங்களுக்கு குறித்த அகழ்வுப் பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழி அகழ்வு ...
Read More »