விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இந்தப் பணியகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியினர் கூறுகின்றனர். தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று இதயபூர்வமாக நம்புகின்ற எந்த படைவீரரும், இதுபற்றி ...
Read More »குமரன்
பிரியங்காவை மனம் திறந்து பாராட்டிய சோனாக்ஷி சின்கா
இந்தி நடிகை பிரியங்கா சுய நலமாக இல்லாமல், பொது நலத்துடன் செயல்படுகிறார் என்று சோனாக்ஷி சின்கா மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தி திரை உலகில் ஒரு பிரபல நடிகையை மற்றொரு பிரபல நடிகை பாராட்டுவது மிகவும் அரிது. ஆனால், சமீபகாலமாக ஒரு நடிகையை மற்றொருவர் பாராட்டும் நிலை உருவாகி இருக்கிறது. பிரியங்கா சோப்ராவை உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டுக்கு நல்எண்ண தூதுவராக ஐ.நா சபை நியமித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பணியில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது பற்றி கூறியுள்ள ...
Read More »சுறா மீன் குட்டிக்காக தற்காலிக உப்பு நீர்த்தொட்டி!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரையில், சுறா மீன் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த சுறா மீன் குட்டியை கடலில் கொண்டுசென்று விட்டனர். ஆனால், அது மீண்டும் கரையைத் தேடி வந்துள்ளது. இவ்வாறு 7 முறை கடலில் விடப்பட்டும், சுறா கரை ஒதுங்கியதால், அதனை காப்பாற்ற தற்காலிக உப்பு நீர்த்தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உப்பு நீர்த்தொட்டியில் சுறா மீன் குட்டி விடப்பட்டுள்ளது. எனவே, அந்த சுறாவை உப்பு நீர்த்தொட்டியில் பாதுகாத்து, ஓரிரு நாட்கள் கண்காணித்த பின் ஆழ்கடலில் விட, கடல் ...
Read More »அவுஸ்திரேலியாவில் R U OK தினம்!
அவுஸ்திரேலியாவில் 14 ஆம் திகதி R U OK? தினம் கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் அருகில் இருக்கும் ஒருவர், அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள். “நீங்கள் நலமா?” R U OK என்ற ஒற்றைக் கேள்வியால் துயரங்கள் விலகிச் செல்லலாம். ஒருவர் மீதுள்ள அன்பில்பால் நாம் கேட்கும் கேள்விகள் மனதை ஆற்றுப்படுத்த பெரிதும் உதவலாம் இல்லையா..?
Read More »சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது!
சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் 500 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் சிட்னி பல்கலைக்கழகம் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்பு பெறுவது இலகு என்பது தொடர்பில், QS Graduate Employability Rankings பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வியின்போது வேலை செய்வதற்கேற்ற தகுதிகளை வளர்ப்பது, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய பின்னர் விரைவாக வேலை கிடைத்தல் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மீது இருக்கும் மதிப்பு போன்றவற்றை பிரதானப் படுத்தப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...
Read More »சியோமி Mi Mix 2 சிறப்பம்சங்கள்!
– 5.99 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே – ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் – 6 ஜிபி ரேம் – 64 ஜிபி, 128 ஜிபி & 256 ஜிபி இன்டெர்னல் மெமரி – 12 எம்பி பிரைமரி கேமரா – 5 எம்பி செல்ஃபி கேமரா – 3400 எம்ஏஎச் பேட்டரி இத்துடன் சியோமி Mi Mix லிமிட்டெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செராமிக் பாடி கொண்ட Mi Mix 2 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ...
Read More »பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: கங்கனா ரணாவத்
பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், அவர்களது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார். இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது வாழ்க்கை அனுபவம் பற்றி கூறுகிறார்… “தற்போது ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். யாரும் நமது வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்பது இந்த படத்தின் நாயகி குணம். உண்மையில் எனது குணமும் இது தான். சின்ன வயதில் திருடி இருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடம் நான் ...
Read More »அவுஸ்ரேலிய அணியில் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர்!
இந்தியாவிற்கு எதிராக விளையாடும் அவுஸ்ரேலியா அணி ‘ஒன் மேன் ஆர்மி அல்ல’. பல சிறப்பான வீரர்களும் உள்ளனர் என ஆல்ரவுண்டர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இடையில் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த தொடர் குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது. விராட் கோலியை ஆஸி. வீரர்கள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்? அணியில் யார் யாருக்கு இடம்? ஸ்மித், வார்னர் அதிக ...
Read More »ஐபோன் கவர்!
வயர்லஸ் ஹெட்போனை கடந்த ஆண்டு அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கும். அதை ஐபோனுடனே வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஐபோன் கவரை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த கவரில் கூடுதலாக பேட்டரி வேறு பொருத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் குறையாது.
Read More »விஷாலை கிண்டலடித்த சேரன்!
துப்பறிவாளன் படத்தின் டிக்கெட் விலையில் ரூபாய் 1 வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்ததற்கு இயக்குனர் சேரன் கிண்டலடித்துள்ளார். விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வெளியானதையொட்டி, திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் ...
Read More »