இந்தி நடிகை பிரியங்கா சுய நலமாக இல்லாமல், பொது நலத்துடன் செயல்படுகிறார் என்று சோனாக்ஷி சின்கா மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்தி திரை உலகில் ஒரு பிரபல நடிகையை மற்றொரு பிரபல நடிகை பாராட்டுவது மிகவும் அரிது. ஆனால், சமீபகாலமாக ஒரு நடிகையை மற்றொருவர் பாராட்டும் நிலை உருவாகி இருக்கிறது.
பிரியங்கா சோப்ராவை உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டுக்கு நல்எண்ண தூதுவராக ஐ.நா சபை நியமித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பணியில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இது பற்றி கூறியுள்ள சோனாக்ஷிசின்கா, “சம்பாதித்தோமா, தலைமுறைக்கு சொத்து சேர்த்தோமா என்று சுயநலமாக செயல்படுவோர் மத்தியில், பிரியங்கா பொது நலத்துடன் செயல்படுகிறார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பெண்மைக்கு சிறந்த முன் உதாரணமாக அவர் திகழ்கிறார். எனக்கும் வாய்ப்பு கிடைத்தால், இது போன்ற பொதுநல பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்” என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal