குமரன்

‘கஜா’வின் கோர தாண்டவம்! – தங்கர் பச்சான் காணொளி

‘கஜா’ புயலின் கோர தாண்டவத்தைப் பற்றிய காணொளிப் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார் தங்கர் பச்சான். கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 15) நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலால் 45 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ...

Read More »

ஏமனில் பசியால் உயிரிழந்த 85,000 குழந்தைகள்!

ஏமனில்  நடக்கும் உள்நாட்டுப் போரில் பசி காரணமாக 85,000 குழந்தைகள் இறந்துள்ளதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏமனில் கடந்த 3 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பசி காரணமாக இறந்துள்ளனர். மேலும் அங்கு பலர் மோசமான  நெருக்கடிக்களுக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் உணவின்றிப் பரிதவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை ...

Read More »

அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley இன்று வந்து என்னைச் சந்தித்தார். உயர்ஸ்தானிகருக்கு கொழும்பில் பல வேலைகள் இருப்பதால் தன்னை அனுப்பியதாகக் கூறினார். பொதுவாக இன்றைய மத்திய அரசாங்கத்தின் நிலை பற்றியும் வடமாகாணத்தின் அரசியல் நிலை பற்றியும் அறிந்து கொள்ளவே தாம் இங்கு வந்ததாகக் கூறியிருந்தார். மத்திய அரசாங்கத்தில் தற்போது நிர்வாக ரீதியாகவும் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் நிலை பற்றி நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். தற்போதைய நிலையில் எவ்வாறு மத்திய அரசாங்க அரசியல் நடவடிக்கைகள் கொண்டு செல்லப்படலாம் என்று அவர் எனது கருத்தைக் கேட்டார். ...

Read More »

பதவி விலகினார் எரிக் சோல்ஹிம்!

ஐநா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை ...

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.   தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20) , ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் ...

Read More »

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை!

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “சமகாலத்தில் உள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசக் கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? ...

Read More »

ஏன் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்டீங்களே!-சின்மயி

இவ்வளவு ஆண்டுகள் ஏன் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்டீங்களே, இப்போது என் நிலையை பாருங்கள் என்று சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். பிரபல பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தார். ஒரு விஷயம் நடந்தால் உடனே சொல்ல வேண்டியது தானே, அது ஏன் இத்தனை ஆண்டு காலம் கழித்து சொல்ல வேண்டும் என்று பலரும் சின்மயி நோக்கி கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் சின்மயி மீது ...

Read More »

என் பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று கூடத்தெரியாது!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டது எனக் கூறுவது சுத்தப் பொய் என்று கைதான சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார். மெல்போர்னில் பொதுமக்கள் பரவலாக உள்ள இடத்தில் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் இன்று (20) அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

Read More »

‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’

‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும். கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்டில் ...

Read More »

திருகோணமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தந்தை காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசுயற்துறைப் பொறுப்பாளராகத் திகழ்ந்து வந்த எழிலன்(சசிதரன்) அவர்களது தந்தையார் கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை அவர்கள் நேற்று மரணமடைந்துள்ளார். போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் குடும்பத்தார் முன்னிலையில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் அவர்களது தந்தையாரின் உடல் கிளிநொச்சியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாக்கிழமை இடம் பெறவுள்ளது.

Read More »