குமரன்

‘சீனாவின் அடிமை நாடாக இலங்கை மாற நேரிடும்‘

வெளிநாடுகளிடம் இருந்து  பெறப்படும்  கடன்களால் சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாக இலங்கை மாற வேண்டிய நிலை ஏற்படும்  என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தில்நேற்று(3) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது”  இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் செலுத்தி  வந்த நாம் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம். ஏதாவது ஒரு சர்வதேசக் கடனை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றிய வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ...

Read More »

கருணாவை கைது செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார் அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள வர்களுக்கு எதிராக ...

Read More »

குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்

உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன. தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் ...

Read More »

என்னை மன்னிச்சிடு பவணி….யாஷிகா உருக்கம்

நடிகை யாஷிகா விபத்தில் பலியான தனது தோழி பவணி குறித்து முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ள யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ ...

Read More »

விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருகின்றாரா?

எதிர்காலத்தில் அரசியலுக்கு நல்ல தலைவர்கள் வருவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட குடும்பத்தின் நன்கு படித்த தலைவர் ஒரு புதிய அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “நீங்கள் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதற்கு வழி வகுக்க முயற்சிக்கிறீர்களா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், “யாரோ ஒருவராக இருப்பார், நான் அதைச் சொல்லவிரும்பவில்லை, அது விமுக்தி குமாரதுங்கவா அல்லது அந்தப் பெயரா ...

Read More »

’என் சாவுக்கு காரணம்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார். ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த அந்த ...

Read More »

பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் ...

Read More »

நெருக்கடியுடன் விளையாடுதல்

நான் ஒரு பொருளாதார நிபுணரோ அல்லது நிதிவிவகார நிபுணரோ அல்ல, ஆனால் இலங்கை அரசின் இயக்கவியலையும் அதன் சமூக-அரசியல் முறைமையையும் கவனமாகப் பின்பற்றிய ஒரு அரசியல் ஆய்வாளர் மற்றும் ஒரு விமர்சகர் என்ற முறையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி செல்கிறதெ ன்று என்னால்எதிர்வுகூற முடிந்தது. பல நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்களில், நாடு வங்குரோத் தாகி விட்டதாக இரவு தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் காலையில் எழுந்தவுடன் நாடு வங்குரோத் தாகி விட்டதாககேட்டு ஆச்சரியப்படக்கூடாது என்று நான் எனது பார்வையாளர்களை எச்சரித்திருந்தேன். ...

Read More »

பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிக்பாஸ் பிரபலங்கள் நடித்துள்ள படத்துக்கு உதவ முன்வந்துள்ளார். மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ...

Read More »