குமரன்

அவுஸ்ரேலியா – வங்காளதேசம் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ...

Read More »

எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும்: கமல்ஹாசன் பேச்சு

அனிதாவைப்போல் தற்கொலை சோகங்கள் நடக்காமல் தடுக்க எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பற்றி உருக்கமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:- “சில கேள்விகள் விடைகாண வேண்டி நமக்காக காத்து இருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் விடைகள் உண்டு. இனி இந்த கேள்விக்கு விடையே இல்லை என்று மனம் தளர்பவர்கள் நம் பிள்ளை ...

Read More »

அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியிலான காண்டாக்ட்களை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் கூகுள் காண்டாக்ட்டில் அழந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். ஸ்மார்ட்போனில் காண்டாக்ட்களை பதிவு செய்ய பயனுள்ள சேவையாக கூகுள் காண்டாக்ட் இருக்கிறது. நமது காண்டாக்ட்களை பதிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் கூகுள் காண்டாக்ட்டில் அவ்வப்போது தேவையற்றதாக இருக்கும் காண்டாக்ட்களை நீக்குவோம். எனினும் தவறுதலாக அவசியமான சல காண்டாக்ட்களை நீக்கியிருப்போம். இதுபோன்ற நேரங்களில் அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் ...

Read More »

பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது – வைகோ

“இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும் “இராமாயண ரகசியம்” ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஒன்றை வைகோ ஆற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ‘‘இராமாயணத்தில் இராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் ...

Read More »

வங்காள தேசத்துக்கு பதிலடி கொடுக்குமா அவுஸ்ரேலியா?

வங்காளதேசத்துக்கு எதிராக நாளை 2-வது டெஸ்ட் போட்டியில் மோத இருக்கும் அவுஸ்ரேலியா, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்துக்கு சென்று உள்ளது. மிர்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா 20 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்ட காஸ்வில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அவுஸ்ரேலியா உள்ளது. மேலும் ...

Read More »

குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 10 இடங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்பு நிறமுடையவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் N***** என்ற சொல்லுடன் இந்த இடங்கள் உள்ளது. இதனால் அது ஒரு வகை இன துவேஷத்தை வெளிப்படுத்தி நிற்பதாகவும், இந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இப்பெயர்களை மாற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது.

Read More »

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

இண்டர்நெட் பயன்பாடு அத்தியாவசிய தேவையாகி விட்ட நிலையில், அனைவரின் வீட்டிலும் இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. சைபர் அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ள நிலையில், வீட்டு நெட்வொர்க் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்ப்போம். இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற வகையில், உங்களது நெட்வொர்க்களை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். பெயரை மாற்ற வேண்டும்: முதலில் உங்களது வைபை பெயரை மாற்ற வேண்டும், பெயரை மாற்றுவது ஹேக்கர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டரை அறிந்து கொள்வதில் சிரமத்தை ...

Read More »

ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்!

அதுல் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாதவன் மறுத்துவிட்டார். காரணம் குறித்து மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியில் அதுல் மஞ்ரேகர் ...

Read More »

இசைப்பிரியா கைதான தகவல் – சரத் பொன்சேகா

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளார்கள் என்ற ...

Read More »

மொபைல் வன்முறை – தவிப்பது எப்படி?

முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். இணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். தொடர்ந்து அதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் உங்களுக்கு சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்களிடம் புகார் செய்ய வேண்டும். அதன் பிறகும் அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும். சில ...

Read More »