குமரன்

ஊடகவியாளருக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பு மீளப் பெறப்பட்டது!

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று காலை அஸாம் அமீனை தொடர்பு கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பை மீளப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அஸாம் அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்வற்கு குற்றப்புலனாய்வு பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்மையானது பொருத்தமானதல்ல என தொலைப்பேசி ...

Read More »

மலேசியாவில் 92 வயது நிரம்பியவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்!

மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட ...

Read More »

சூப்பர் சிங்கர் பிரகதி கரம் பற்றப்போகும் தென்னிந்திய நடிகர்!

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடாத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார். இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என நிறைய பணிகளுடன் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தங்களது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்களாம். அசோக்செல்வன் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Read More »

புலனாய்வாளர்களின் இறுக்கமான கண்காணிப்பின் கீழேயே ஊடகப் பணி!

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. அதேவேளை, யுத்தத்தின் பின்னர் நிலைமாறு கால நீதி பற்றி பேசப்படுகின்ற சூழலில் இது போதிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் முன்னைய ஆண்டிலும் பார்க்க சிறிது முன்னேறியிருக்கின்றது என்பதை ஆர்.எஸ்.எவ் என்ற அமைப்பு, அகில உலகளாவிய தனது ஊடக சுதந்திர நிலைமை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத் ...

Read More »

அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுழையும் வெளிநாட்டு மருத்துவர்களை குறைக்க தீர்மானம்!

அவுஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. நேற்று (080 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதுவரை ஆண்டொன்றுக்கு 2300 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை 2,100 ஆக குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. மேற்குறித்த முடிவின் காரணமாக அடுத்த 4 ஆண்டுகளில் மெடிகெயார் ஊடாக 416 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென ...

Read More »

கூகுள் வரைபட சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம்!

கூகுள் I/O 2018 நிகழ்வின் முதல் நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் கூகுள் மேப்ஸ் தளத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றியமைக்கப்படுவதாகவும், இனி அருகாமையில் இருக்கும் புதிய மற்றும் வித்தியாசமானவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். ...

Read More »

இறுதி பயணத்திற்காக செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு முன் உயிர் பிழைத்த அதிசயம்!

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கடுமையான மூளை காயங்களால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவனது பெற்றோரிடம், இனி அவன் திரும்பிவரமாட்டான். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் ஐந்து சிறுவர்களுக்கு அவனது உடல் பாகங்கள் பொருந்திப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அவனது உயிருக்கு ஆதரவு வழங்கி வந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு, ஒருநாள் முன்னதாக ...

Read More »

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்­களை முறை­யாகச் சென்­ற­டைய வேண்டும்!

தகவல் அறியும் உரி­மைச்­சட்­ட­மா­னது தற்­போது எமது நாட்டில் நடை­மு­றையில் உள்­ளது. எனினும் இது தொடர்­பான விளக்கம் பொதுமக்­களை முறை­யாகச் சென்­ற­டைய வேண்டும். தகவல் அறியும் உரி­மைச்­சட்டம் தொடர்பில் மக்­களை விழிப்­பூட்டும் செயற்­பாட்டை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இல­கு­வாக மேற்­கொள்ள முடியும் என இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் தலைவர் குமார் நடேசன் தெரி­வித்தார். இலங்­கையில் தகவல் அறியும் உரி­மைச்­சட்டம் நடை­மு­றை­ப்படுத்­தப்­பட்டு ஓராண்டு நிறை­வ­டை­வ­தனை முன்­னிட்டு “தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்­களை விழிப்­பூட்டல்” எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான சர்­வ­தேச மாநாடு இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூது­வ­ரா­லயம் என்­ப­வற்றின் ...

Read More »

கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த யாழ். இந்துவின் மாணவன் பலி!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் காங்கேசன்துறைக்கு சென்று வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த குறித்த மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து ...

Read More »

மனுஸ் தீவு அகதிகள் பப்புவா நியுகினி முகாம்களுக்கு செல்ல மறுப்பு!

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி இன்றுடன் மூடப்படவுள்ளது. ஆனால் அங்குள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது. பப்புவா நியுகினியிலேயே நவுறு ...

Read More »