மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவார். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையைப் பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ...
Read More »குமரன்
சிறிலங்காவில் ஆகஸ்ட் முற்பகுதியில் தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் முற்பகுதியில் நடத்துவது குறித்தே தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துவருகின்றது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் திங்கட்கிழமை இது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வேட்பாளர்களின விருப்ப்பிலக்கங்களை நாளை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் . தேர்தல்வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய இம்முறை மரப்பெட்டிகளால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை ...
Read More »அவதூறு வழக்கில் இம்ரான்கானிடம் விளக்கம் கேட்ட பாக். நீதிமன்றம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில், அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இம்ரான்கான் தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு சுமத்தியுள்ளார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷாபாஷ் ஷெரீப் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக நடந்து வருகிற இந்த வழக்கில் ஜூன் 10-ம் திகதிக்குள் இம்ரான்கான் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ...
Read More »சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
சாந்தனு இயக்கி நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை பார்த்து விஜய் பாராட்டி உள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். அந்தவகையில் இந்த ...
Read More »இராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்!
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும் இடம்பெறச் செய்வதன் பின்னணி என்ன? எஞ்சியுள்ள தமிழர் நிலங்களை சூறையாடுவதும், தமிழர் உரிமைக்குரலை நசுக்குவதும்தான் காரணம் என்பதை தமிழர் தலைமைகள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன? இலங்கை அரசாட்சியில் எங்கும் எதிலும் ராணுவம் என்ற நிலை மேலோங்கி வருகிறது. எதற்கெடுத்தாலும் ராணுவத்தினரையே நியமனம் செய்கின்ற புதிய ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னரும், ...
Read More »யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார். 1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் ...
Read More »இந்திய எல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா
இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு சீனா, லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்து இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் அடிக்கடி எல்லையை தாண்டி இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. லடாக் எல்லை பகுதியில் சமீபத்தில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தை தணிக்க இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் ...
Read More »சிறிலங்காவில் நாளை தேர்தல் ஒத்திகை
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தல் நாளை (7) காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இடம்பெறவுள்ளது. அம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்காக 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இணங்காண்பதே இந்த தேர்தல் ஒத்திகையின் நோக்கமாகும். சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள ...
Read More »சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் சிவில் சட்டங்களை மீறுகின்றனர்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், துறைச்சார் தேர்ச்சி பெற்றவர்கள் ஊடாக முன்னெடுக்க வேண்டிய பிரிவுகளுக்கு இராணுவத்தினரை நியமித்து வருவது இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகும் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்டவிதிகளை அரசாங்கம் மீறிவருவதுடன் , அமெரிக்க இராஜதந்திரி தொடர்பிலும் அக்கறையின்றி இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் ...
Read More »காக்க காக்க 2-ம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் – ஜோதிகா
காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ...
Read More »
Eelamurasu Australia Online News Portal