இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு சீனா, லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்து இருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் அடிக்கடி எல்லையை தாண்டி இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. லடாக் எல்லை பகுதியில் சமீபத்தில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தை தணிக்க இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு சீனா, லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்து இருக்கிறது. தரைப்படை, விமானப்படை, ராக்கெட் படை ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல படை பிரிவின் ஒட்டுமொத்த தளபதியாக தற்போது சாவோ ஜோங்கி இருந்து வருகிறார்.