ஜோதிகாவிற்கு கணவராக காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கும் வித்தார்த், இந்த படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். 36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் திகதி திரைக்கு வருகிறது. மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் ...
Read More »குமரன்
யாழில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து 9 பேர் கொண்ட குழு அட்டகாசம்!
யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை காணொளி அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் இன்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். “இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் ...
Read More »ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது!
ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா காவல் துறை முச்சக்கரவண்டி ஒன்றை ...
Read More »அவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு!
அவுஸ்ரேலிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மல்கம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை அமைச்சரும், முன்னாள் ...
Read More »கிம்மை மீண்டும் சந்திப்பேன்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிலையில் டிரம்ப், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி ...
Read More »வெர்டிகல் மவுஸ் (Vertical Mouse)
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மவுஸில் கையை ஒரே கோணத்தில் பயன்படுத்துகிறோம். நாம் தினசரி மவுஸை பயன்படுத்தி வந்தால் கை வலி ஏற்படும். இதுவே வெர்டிகல் மவுஸ் பயன்படுத்துவதன் மூலம் கை நடுநிலையாக இருக்கும். மவுஸில் நாம் கைகளை வைத்திருக்கும் முறையை வைத்து இந்த வெர்டிகள் மவுஸ் வடி வமைக்கப்பட்டிருக்கும்.
Read More »எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை!
“எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் பரிந்துரைகளின் படி அரசாங்கம் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு கண்டனப்போராட்டமொன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து இப்போராட்டத்திலில் பங்குபற்றிய பெண்களைக் கொச்சைப்படுத்தியும் வன்மமாக திட்டியும் பேஸ்புக், இணையதளங்களில் பல ஆண்கள் பதிவுசெய்து வருகின்றமையைக் ...
Read More »தி.ஜானகிராமன்: அன்பின் நித்தியச் சுடர்!
தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜானகிராமனுக்கும் ஜெயகாந்தனுக்கும் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. ஜெயகாந்தன் தன் காலத்துக்குரிய கருத்துரீதியான கதையாடல்கள் மூலம் இதை சாத்தியப்படுத்தினார். ஜானகிராமன் என்றென்றைக்குமான உணர்வுகளின் நெகிழ்ச்சியான கதையாடல்கள் மூலம் இத்தன்மையை வசப்படுத்தினார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் தத்துவார்த்த ஒளி கூடிய புதிய வெளிச்சம் சுடர்விட்டது. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம் என்றாக அமைந்த நவீன செவ்வியல் படைப்புகளை ஸ்வீடனின் ...
Read More »மஹிந்தவின் செயல்களுக்கு வயதுக் கோளாரே காரணம்!
கனவில் மட்டுமே மஹிந்த ராஜகன்ஷ ஜனாதிபதியாக முடியுமெனவும் அவரின் குதூகலமான செயல்களுக்கு வயதுக் கோளாரே காரணமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக் ஷவினால் முடியாது. தோல்வி அடைந்த பின்னர் வீடு செல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்தார். அதன்பின்னர் பிரதமராக முயற்சித்தார். அது முடியாது போனமையினால் எதிர்க்கட்சி தலைவராக முற்பட்டார். தற்போது மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவு காண்கின்றார். இவ்வாறான செயல்கள் அவருக்கு குதூகலமானவையாகும். அது வயது கோளாறாராகும். 70 வயதை ...
Read More »ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்கா பயணம்!
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவிற்கு சென்றுள்ளார்.. சிறிலங்கா சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த சிறிலங்காவுக்கான விஜயமானது ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் முதலாவது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »
Eelamurasu Australia Online News Portal