குமரன்

ஊடகவியலாளர் தயாபாரன் மீது தாக்குதலா?

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ர ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அச்சுவேலி காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்கல் புலம்பெயர் சமுகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கான உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார். குறித்த சம்பவம் சாதாரண ...

Read More »

தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். அதை மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததா என்பது பற்றி விசாரணை நடத்திய விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்ப்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ...

Read More »

ரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியின் வயதான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக ...

Read More »

மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். ‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் சொல்கிறார்:- ‘‘இந்த படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். ...

Read More »

அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி!

டிரம்ப்-கிம் ஜாங் அன் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது. ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ...

Read More »

மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி!

சிறிலங்கா ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட ...

Read More »

தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும்போது பயனற்றுப்போகின்றது !-இந்திய பாடகி ஸ்ரீநிதி

இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியாவை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி!

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில் சிவப்பு மான் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய இந்த சிவப்பு மான் ராட்சத கொம்புகளை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை பவுல் மெக்டொனால்டு, மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். மான் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும்.  

Read More »