குமரன்

கூட்டமைப்பு கூட இன அழிப்பு என்பதனை ஏற்க மறுத்து விட்டது!

இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிட்ட கட்சிகள் கால அவசாகசம் கேட்டு பிரேரணையை ஏற்க மறுத்துள்ளன. குறித்த பிரேரணையில் இன அழிப்பு என்ற சொற்பதம் காணப்படுவதால் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வலிகாமம் தெற்கு ...

Read More »

வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய மூன்று நாடுகள்!

வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறது. முதற்கட்டமாக அணு ஆயுத சோதனை மையத்தை அழித்தது. அத்துடன் அணு ஆயுத திட்டங்களையும் கைவிட தயாராக உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது தங்களிடம் ...

Read More »

செளபா: சாம்பலான தோட்டம்!

காணி நிலம் வேண்டிச் செத்துப்போன கவிராஜனின் கனவை நனவாக்கிய தோட்டச்சாமி. நாலு திக்கும் மலைகள் சூழக் குடில் அமைத்து, அடுப்பு நெருப்பை அணையவிடாமல், பொங்கிப் பொங்கிப் போட்டுக் களித்த நளராஜா. மழையும் குளிரும் தராது தோற்கும் வாஞ்சையை, காண்பவர் மீதெல்லாம் கொட்டித் தீர்த்த பேரருவி. வெண்கலக் கும்பாவுக்குள் உருளும் கோலிக்குண்டுச் சிணுங்கலாய், வார்த்தைக்கு வார்த்தை அன்பை இசைத்த நாதமுனி. ஒவ்வொரு எட்டுக்கும் முன், தும்பிக்கையால் தரை சோதித்து நடந்த காட்டு யானை. அவன் வளர்த்த காடுகளுக்குள் கூடு கட்டிக் குதூகலித்த குயில்களும் கிளிகளும் ஏராளம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருபவர் தனது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதுவொருபுறம் இருக்க Test of English as a Foreign Language Paper-Based பரீட்சையை subclass 500 மாணவர் விசாவுக்காக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. TOEFL Paper-Based பரீட்சையின் மூலம் ஒருவரின் ஆங்கிலம் பேசும் திறன் புலப்படுவதில்லை. இதன் காரணத்தினால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் இப்பரீட்சை முடிவினை ஏற்றுக்கொள்வதில்லை என ...

Read More »

யாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. தனது மகனை பாடசாலைக்கென அழைத்துச்சென்றிருந்த குறித்த முன்னணி இணைய ஊடகவியலாளரை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் சட்டநாதர் வீதி சந்தியில் கைத்துப்பாக்கியுடன் வழிமறித்த இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்களுள் ஒருவர் வல்வெட்டித்துறை இராணுவ முகாமை சேர்ந்த புலனாய்வாளர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். மற்றொரு நபர் உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவரே அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ...

Read More »

இன்று திருமலையில் காணாமல் போனோருக்கான சந்திப்பு!

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக ...

Read More »

பெண் பாடகர்களில் ரொம்பவும் தனித்துவமான குரல் ஜென்ஸியுடையது!

இந்தியா முழுக்க இந்தித் திரைப்படப் பாடல்கள் கோலோச்சிய காலகட்டத்தில், அனைவரையும் நாட்டின் தென் திசைநோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர், இசைஞானி இளையராஜா. தமிழ் மண் மணத்தை உலகம் முழுக்க இசையாகக் கொண்டுசேர்த்த இசைக் கலைஞர். காதல், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை, சோகம், காதல் தோல்வி என அனைத்துவித உணர்வுகளையும் இளையராஜாவின் கரம்பிடித்தே கடக்கின்றனர் இசை ரசிகர்கள். இன்றைக்கும் நெடுந்தொலைவு பயணத்துக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் மறக்காமல் எடுத்துக்கொள்வது, இவரின் இசைப் பாடல்களின் தொகுப்பையே. அந்தத் தொகுப்பில், ஜென்ஸி பாடிய ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பிடித்துவிடும். அப்போதைய பெண் பாடகர்களில் ...

Read More »

அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட ...

Read More »

சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு!

“ஒன்றுமில்லாததற்கு அவனுக்கு அந்த புதிய வாழ்க்கை வழங்கப்படமாட்டாது, அதற்கு அவன் மிக மிக அதிகமான விலையைத் தர வேண்டும் அதாவது அது பெரிய போராட்டத்தையும், பெருந்துயரத்தையும் விலையாகக் கேட்கும். ஆனால், அதுதான் புதிய கதையின் தொடக்கம் – ஒரு மனிதனின் படிப்படியான புதுப்பித்தலின் கதை, அவனது மீளுருவாக்கத்தின் கதை, ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு அவன் கடந்து செல்வதன் கதை, அவனறியாதப் புதிய வாழ்க்கையின் தொடக்கம் அது. அதுவே அந்த புதிய கதையின் கருவாக இருக்கும், ஆனால், அதற்கு நமது தற்போதைய கதை முடிய வேண்டும்’’ ...

Read More »

1.1 மில்லியன் பெறுமதியான வீடு எரிந்து சாம்பலானது!

அவுஸ்திரேலியாவில் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த வீடு சில மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. விற்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். மேலும் குறித்த வீட்டுப் பெண் தனது நாயை வாக்கிங்கு அழைத்துக் கொண்டு வெளியே சென்றமையால் உயிர் சேதம் ஏற்படவில்லை. டிம்பர் மரத்திலான இரு வீடுகள் பற்றி எரிவதைப் ...

Read More »