குமரன்

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியைக் கைது செய்ய இடைக்கால தடை!

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியை ஜூலை 16-ம்திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அதில், “கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண, குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய `ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படம் எடுத்துவருகிறேன். இதன் டீசரை வெளியிட்டுள்ளேன். இந்நிலையில், எனது வீட்டுக்குப் காவல் துறை வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். ...

Read More »

ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது. அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது. அம்பாந்தோட்டைத் ...

Read More »

சிறார்களுக்கான தேடியந்திரம்!

கூகுள் முன்னணித் தேடியந்திரமாக விளங்கினாலும், சிறார்கள் இணையத்தில் உலாவும்போது பயன்படுத்த பாதுகாப்பான தேடியந்திரம் தேவை. அந்த வகையில், சிறார்களுக்கான தேடியந்திரமாக, ‘கிட்டி’ (Kidy) தேடியந்திரம் புதிதாக இணைந்துள்ளது. சிறார்களுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கம் இந்தத் தேடியந்திரத்தில் குறிச்சொற்கள் மூலம் முடக்கப்படுகின்றன. மேலும் பல வகையான பாதுகாப்பு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன. கூகுள் தேடியந்திரம் அளிக்கும் தேடல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தேடியந்திரமும் செயல்படுகிறது. இணைய முகவரி: https://kidy.co/

Read More »

குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் பலி!

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். குகையில் சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரர் பலியானதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கை அறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை 68 வயது தந்தை ஒருவர் சுட்டுக் கொன்றிருந்தார். அத்துடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றது. இந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் ...

Read More »

“அன்று மக்களுக்காக உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா“!

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. அத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமர் ரணிலையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந் நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ...

Read More »

அதிகரிக்கும் வன்முறைகள்!- பி.மாணிக்கவாசகம்

நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குரிய இலட்சணமாகும். அந்த வகையில் தற்போதுள்ள நிலைமையை ...

Read More »

மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ததில் நான் பெருமை கொள்கின்றேன்!-விஜயகலா

அமைச்சர் விஜயகலா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபாலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு நேற்று(5) அனுப்பி வைத்தார். இதுகுறித்து விஜயகலா தனது முகநூல் பக்கத்தில் மக்களின் துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியாமையினாலேயே குரல் கொடுத்தேன் மக்களுக்காகவே பதவி துறந்தேன். வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமாச் செய்துள்ளேன். வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி ...

Read More »

அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்!

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து ...

Read More »

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி: ரணில் நாடாளுமன்றத்தில் விசேட உரை !

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாகவே மேற்படி உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு ...

Read More »