40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இவற்றில்18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »குமரன்
விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார். இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் ...
Read More »சீன ராக்கெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது
ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது. விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட் பாகம் பூமியில் விழும் ...
Read More »சர்வதேச அன்னையர் தினம்
சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தம்முடைய தாய்க்கு வாழ்த்தை கூறி விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறலாம். அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. தாய்மையின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் ...
Read More »ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.அப்போது இந்த மசூதியின் முற்றத்தில் இஸ்ரேலிய போலீஸ் படைகள் நுழைந்து, தொழுகையில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது ...
Read More »ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர்-சிலாட்டர் மாலத்தீவு மதுபாரில் சண்டை?
ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேரை கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் ...
Read More »யாழ்.மாநகர கண்காணிப்பு அணியினரை ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும்
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள மேயரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்துக்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ்.மாநகர சபைக்கு உள்ளது என மனோ எம்.பி. தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: பயங்கரவாத விசாரணை பிரிவு, சர்ச்சைக்குரிய யாழ் மாநகர சபையின் தூய்மை கண்காணிப்பு அணியினர் ஐவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது. அப்பாவிகளான இவர்களை, ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு, யாழ் மாநகர சபைக்கு இருக்கின்றது. கட்சி பேதங்களுக்கு அப்பால், அனைத்துக் கட்சி யாழ். எம்.பிக்களினதும், அரசியல், ...
Read More »யாழில் நேற்று 18 பேருக்கு கொவிட்-19 தொற்று
யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 668 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ். மாவட்டத்தில் 18 பேரும் கிளிநொச்சி, மன்னாரில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட3 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Read More »நவம்பர் ஸ்டோரி’- தமன்னா நடிக்கும் புதிய இணைய தொடர்
தமன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘நவம்பர் ஸ்டோரி’. 7 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரை ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இதில் தமன்னாவுடன் பசுபதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் தமன்னா, அனுராதா என்னும் ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரம் குறித்து தமன்னா கூறும்போது, ‘அனுராதா ஒரு சுதந்திரமான, பயமறியாத, புத்திசாலி இளம்பெண். ஒரு இரக்கமற்ற கொடூர கொலைகாரனிடமிருந்து தன் தந்தையை காப்பாற்றும் ஒரு கதாபாத்திரம். கதையின் நாயகியான ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பது என் ...
Read More »சர்வதேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் – ஆஸ்திரேலியா மந்திரி விளக்கம்
ஆஸ்திரேலியாவில் புதிதாக 21 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதனால் தனது நாட்டின் சர்வதேச எல்லையை முழுமையாக திறக்காமல் உள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹான் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal