தமன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘நவம்பர் ஸ்டோரி’. 7 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரை ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.
இதில் தமன்னாவுடன் பசுபதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் தமன்னா, அனுராதா என்னும் ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் குறித்து தமன்னா கூறும்போது, ‘அனுராதா ஒரு சுதந்திரமான, பயமறியாத, புத்திசாலி இளம்பெண். ஒரு இரக்கமற்ற கொடூர கொலைகாரனிடமிருந்து தன் தந்தையை காப்பாற்றும் ஒரு கதாபாத்திரம். கதையின் நாயகியான ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பது என் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த அனுபவம்’ என்றார்.
‘நவம்பர் ஸ்டோரி’ தொடர் வரும் மே 20ஆம் தேதி அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Eelamurasu Australia Online News Portal