யாழ்.திருநெல்வேலிச் சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நல்லூர் பிரதேச சபையினரால் வெளியேற்றப்பட்டனர். நல்லூர் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையைச் சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதிப் பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்து வருவதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் காவல் துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 ...
Read More »குமரன்
அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், அவர் அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்து பலரைக் கவர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது, ‘ஒவ்வொரு நடிகருக்குமே தனிப் பாணி உள்ளது என நினைக்கிறேன். விஜய்யைப் பொறுத்தவரை அவர் எப்படித் தயார் செய்து ...
Read More »அமெரிக்க வன்முறையின் வரலாறு
கேப்பிட்டலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட ரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே மறக்கும் இந்தச் செயல் – அமெரிக்க அறியாமை என்ற தொன்மத்துடன் சேர்ந்து ...
Read More »பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்
பிரிஸ்பென் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ...
Read More »விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்
விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார். தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற ...
Read More »1953க்கு பின்னர் அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. லிசா மொன்ட்கொமேரி 2014 இல் கர்ப்பணிப்பெண்ணொருவரை கொலை செய்த பின்னர் அவரது ...
Read More »ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்!-சம்பந்தன் எச்சரிக்கை
“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்தார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசமைப்பு நிறைவேறா விட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ...
Read More »பூஸா சிறைக் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி
பூஸா சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒரு தாக்குதல் தொடர்பில் இக்கைதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்கொலைக்கு முயன்ற காரணம் இன்னும் வெளியிடப் படவில்லை எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் கூறினார்.
Read More »கொவிட்-19: எட்டாவது சிறைக் கைதி உயிரிழப்பு!
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் நேற்றிரவு(13) உயிரிழந்துள்ளார். இதன்படி சிறைகளில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இதுவரை 3850 கைதிகளும் 123 அதிகாரிகளும் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தற்போது 285 கைதிகளும் 6 அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Read More »போரின்போதும் அதன் பின்னரும் என்ன நடந்தது?
இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேயான வேற்றுமைகள், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தமிழ் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal