குமரன்

இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்!

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ...

Read More »

வாஜ்பாய்: மாற்றாரும் நேசித்த தாமரை!

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னிகரற்றவர். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், பெரிய மக்கள் தலைவர். இளமைக் காலம் பள்ளிக்கூட ஆசிரியர் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் – கிருஷ்ணா தேவிக்கு 1924, டிசம்பர் 25 அன்று குவாலியரில் புதல்வராகப் பிறந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். சகோதர, சகோதரிகள் உண்டு. பூர்விகம் உத்தர பிரதேசத்தின் பாதேஷ்வர் என்றாலும் தாத்தா பண்டிட் ஷியாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு இடம்பெயர்ந்துவிட்டது வாஜ்பாய் குடும்பம். சரஸ்வதி ...

Read More »

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்கா இரங்கல்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ...

Read More »

இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. ...

Read More »

சப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே!

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுவினர் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். இதற்கிணங்க குற்றபுலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. சி.ஐ.டி.யினர் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டிருந்த வேளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி ...

Read More »

மக்களின், மக்களால், மக்களுக்காக…

சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியாராமல், மக்கள்  ஒன்றிணைந்து தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டன. அண்மையில் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதும் இந்த வகையில் அடங்கும் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தன்னார்வ அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணையும் மக்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றாடல் போன்ற விடயங்களில், அரசாங்கத்தை பகைக்கா வண்ணம், தங்களைத் தாங்களே ...

Read More »

16 புதுமுகங்கள் – ‘சிவ சிவா ‘

புதியவர்கள் இணைந்து நடிக்கும் படம் ‘சிவ சிவா.’ இதனை அறிமுக இயக்குனர் ரமா இயக்குகிறார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.ஜி ரிதம் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார். இதில் 16 புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ராட்டினம் கே.எஸ். தங்கசாமி, நடிகர் பிரதாப் சந்தீப், நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். “முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம். சினிமாவை ...

Read More »

மரணம் ஒரு கலை!

மத்திய தரைக்கடலை அள்ளிப் பருகுவதைப் போல் அமைந்துள்ள கிரேக்க நாட்டின் கிழக்கில் அமைந்துள்ளது. ஏதென்ஸ் உலக நகரங்களிலேயே தனித்துவமானது. நிலவியலாளர்களும், கணித வல்லுநர்களும், கவிஞர்களும், மெய்யியலாளர்களும் வீதிக்கு வீதி நடமாடிய அறிவுலகம். முதன்முதலில் உலக நாடுகளுடன் கடலோடி செல்வத்தில் செழித்த நகரம். அறிவை நேசித்த, அறிவாக உருப்பெற்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் முகப்பினை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர் தத்துவஞானி சாக்ரடீஸ். குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் ...

Read More »

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் சபாநாயகர் ஆனார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. அந்தக் கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கட்கிழமை கூடியது. இதில் இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ...

Read More »