ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தியிருந்தமைக்கு பல காரணங்கள் ...
Read More »குமரன்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது
தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: ...
Read More »சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் கடிதம்…..
தன்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சபையின் கவனத்துக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றதை அடுத்து, அதுதொடர்பில், தேடியறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, காவல் துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் தேடியறிந்து, தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறே, சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ...
Read More »மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் மாமனிதர், பேராசியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள், இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை அதை தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும். இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ...
Read More »கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தெரிவிப்பதாக சிவகார்த்திகேயன் கூறி உள்ளார். 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற திரையுலக பிரபலங்ளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த விருதை தன் தாய்க்கு ...
Read More »மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை ...
Read More »புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்
இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது. பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பது சர்வதேச சட்டத்தை உறுதி செய்வது ...
Read More »ஜெனிவா சமர் நாளை ஆரம்பம் : 24 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் – புதிய பிரேரணையும் வருகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ; 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ;ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ;தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் ;புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதேவேளை 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24 ஆம் திகதி காலையில் ;இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கின்றார். அமைச்சர் ...
Read More »யாழில் 24 வாரத்தில் பிறந்த குழந்தையை சுகதேகியாக மாற்றி மருத்துவர்கள் சாதனை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத கர்ப்பவதியாக இருந்த அன்று குற்றுக் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மந்திகையில் அனுமதிக்கப்பட்ட தாயார் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருந்தபோதும் உடனடியாக குழந்தை பிரவசித்தார் சாதாரணகர்ப்ப காலம் 40 வாரமாக உள்ளபோதும் 24 வார கர்ப்பத்தில் பிறந்த ; குழந்தையின் நிறை 600 கிராம் மட்டுமே ...
Read More »ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இருக்க வேண்டும்
தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ்மக்கள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal