குமரன்

யாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு!

யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள் மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் அனுமதித்துள்ளனர். அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வாடி வீட்­டுக்கு அண்­மை­யில் குறித்த இளை­ஞன் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வீதி­யோ­ரம் வீழ்ந்து கிடந்­துள்­ளார். அதன் போது அந்த வீதி­யில் சென்ற முச்­சக்­கர வண்­டிச் சாரதி அதை அவ­தா­னித்­து. வீதி­யில் வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டிச் சார­தி­யும் இணைந்து அவ­சர நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்கு அறி­வித்­துள்­ள­னர். .இதனையடுத்து சம்­பவ இடத்­துக்கு சென்ற ...

Read More »

அரசியல் நெருக்கடியை தொடக்கிவைத்தவரே முடித்துவைக்கவும் வேண்டும்!

எவரும் எதிர்பார்க்காத முறையில் அக்டோபர் 26 மூண்ட அரசியல் நெருக்கடி இன்னமும் தொடருகிறது. இப்போது அது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த எதிர்பாராத தீர்மானம் சந்தேகப்படாதிருந்த ஒரு நாட்டின் மீது பிரச்சினையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராஜபக்ச பிரதமர் என்ற வகையில் தனது புதிய பதவியை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இயலாதவராக இருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும். கடந்த ...

Read More »

எதை பாதுகாக்க சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்? லசந்தவின் மகள் மைத்திரிக்கு கடிதம்

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்,உங்கள் முப்படைகளின் பிரதானியை ...

Read More »

ஃபேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ பார்க்க புது வசதி!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும். ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் ...

Read More »

கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை – டிரம்ப்

பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா கடுமையாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது. கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து ...

Read More »

பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள  காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின்  வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே   காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள   காவல் துறை  இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 17000 தொலைபேசி அழைப்புகளையும் ...

Read More »

மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற அவுஸ்திரேலியப் பிரதமர்!

அவுஸ்திரேலியாவில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இக் கருத்துக் கணிப்பு முடிவுகளை Fairfax-Ipsos வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசை விடவும் 52-48 என முன்னிலை வகிக்கிறது. இதேவேளை கடந்த மாத கருத்துக்கணிப்பில் 55-45 என லேபர் கட்சி முன்னிலை வகித்திருந்த நிலையில் இந்த முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் Scott Morrison மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக உள்ளார். எதிர்கட்சித் தலைவர் Bill ...

Read More »

திரைமறைவில் என்ன நடக்கிறது?-கெஹெலிய ரம்புக்வெல்ல

நாடாளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய நாடாளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் ...

Read More »

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு ...

Read More »

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்!

அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின்கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரைபதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே ...

Read More »