9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு கொள்கைப் பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டமை ,மறுநாள் அந்தக் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதம் என இருநாட்களும் பாராளுமன்றம் பரபரப்பாகவே காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்பட்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும் தேசியப்பட்டியல் ஆசனங்களூடாக தெரிவானவர்களும் சத்தியப்பிரமாணம் செய்வதற்கும் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ,பிரதி சபாநாயகர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரையும் தெரிவு ...
Read More »குமரன்
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு
திருக்கோவில் காவல் துறை பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கசெய்யப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து விமானப்படையினரினால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியை பெற்று செயழிலக்கம் செய்ய ...
Read More »கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு
இலங்கை மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2954ஆக உயர்ந்துள்ளது.
Read More »பயம் தான் அதற்கு காரணம் – சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயம் தான் அதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ...
Read More »அஞ்சலில் சேராத கடிதம்
அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நீண்டநாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இப்போதுதான் அதற்கான தருணம் கைகூடியது. நீங்கள் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எழுதுவதற்கு இதையும்விடப் பொருத்தமான தருணம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. உங்களது அன்புத்தந்தையார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு, 1988 டிசம்பரில் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அந்தக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு எவருமே இதுவரையில் வெற்றி பெறவில்லை, வெற்றிபெற முடியவில்லை. 2019 நவம்பர் ...
Read More »இந்தோனேஷியாவில் குமுறத் தொடங்கியுள்ள சினாபுங் எரிமலை
மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலையானது ஞாயிற்றுக்கிழமை குமுறத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலையே இவ்வாறு குமுறத் தொடங்கியுள்ளதாகவும், அதன் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 1,000 மீட்டர் (3,280 அடி) க்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை காற்றில் இந்த எரிமலை வெளியேற்றியுள்ளது, மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் ...
Read More »சந்திரிகாவின் புதிய முயற்சி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி ஒன்றைத் தனியாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளில் விரக்திய டைந்தவர்களுக்காக அவர் இவ்வாறு ஒருங்கிணைத்து வருகிறார். இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் வரிசை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ...
Read More »இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி……?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி ...
Read More »கஜேந்திரகுமாரின் உரையை பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு மக்டேமெற்!
“உண்மையை பேசுகின்ற துணிச்சலான மனிதன். அவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார் கியு மக்டேமெற். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தனது சமூகதளத்தில் பகிர்ந்துகொண்ட அவுஸ்திரேலிய நியு சவுத் வேல்ஸ் மாநில உறுப்பினர் கியு மக்டேமெற் அவர்களே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் உரையின் முழு வடிவம் பின்வருமாறு: “தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஏகோபித்த ஆணை ...
Read More »விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்… அதுதான் உண்மை – விஜய் சேதுபதி
விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்… அதுதான் உண்மை என்று லாபம் படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். The ...
Read More »
Eelamurasu Australia Online News Portal