குமரன்

இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்!

அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. வடமாகாணத்தின் ...

Read More »

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம்  கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே  அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும்   தொலைபேசி சிம் அட்டை  அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால்  பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை  ...

Read More »

நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது!

நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை ...

Read More »

அஜித்துடன் மோதும் நயன்தாரா!

பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, தற்போது பட ரிலீசில் அவருடன் மோத உள்ளார்.   அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படமும் ஆகஸ்ட் 9-ந் தேதி ரிலீசாகும் ...

Read More »

மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியர் 107 வயதில் காலமானார்!

சிட்னியில் வாழ்ந்துவந்த நாட்டின் மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியரான Shankerlal Dalsukhram Trivedi அண்மையில் தனது 107வது வயதில் காலமானார். Shankerlal Dalsukhram Trivedi 28ம் திகதி டிசம்பர் மாதம் 1911ம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வஸ்னா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது மனைவி 1993ம் காலமானதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு 8 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் 2001-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொண்டார். சிட்னியில் வாழ ஆரம்பித்த காலம்முதல் குஜராத் பின்னணி கொண்ட இந்தியர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொண்ட Shankerlal Dalsukhram ...

Read More »

251 ஓட்டத்தினால் ஆஸி. அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.   இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. 90 ஓட்டம் என்ற ...

Read More »

பூர்வகுடிகள் ஐந்துபேர் படகு மூழ்கி பரிதாபமாக பலி?

ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் வாழும் Torres Strait பகுதி கடலில் இரண்டு தீவுகளுக்கு இடையில் படகில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காணாமல்போயுள்ளனர். இவர்களது படகு மீட்கப்பட்டுள்ளபோதும் பயணம் செய்த எவரையும் நான்கு நாட்களாக கண்டுபிடிக்கமுடியவில்லை. கடல்வழியாகவும் வான் வழியாகவும் தங்களது தேடுதல் பணிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த மீட்புப்படையினர் குறிப்பிட்ட குடும்பத்தின் உறவினர்களிடம் தாங்கள் தேடுதல் பணியை நிறுத்துவதாகவும் காணாமல்போனவர்கள் உயிருடனிருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். Badu தீவிலிருந்து Dauan தீவுக்கு கடந்த 31 ஆம் திகதி படகில் புறப்பட்டு சென்றவர்களுக்கே இந்த ...

Read More »

கனடாவில் நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்!

கனடா நாட்டின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முக்கிய நகருக்கு தலைமை காவலராக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் நகரத்தின் தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் கூறுகையில், ‘3000 காவலர்களை கொண்டுள்ள பீல் நகருக்கு ...

Read More »

விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More »

மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள்! – செல்வம்

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சர்­வ­தே­சத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத நீதியை பிளவு பட்ட தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யுமா? தமிழ்த் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்தால் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்தின் மீது ஒரு அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முடியும். அவர்­களின் ஒற்­று­மையும், பத­வியும் தான் அர­சுக்கு ...

Read More »