பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்கர்களுக்குக் கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்கர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது. ஒரு பாஸ்வேர்டு… ஒரே பாஸ்வேர்டு… உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள ...
Read More »குமரன்
அப்பாதான் என் சூப்பர்மேன்: சுருதிஹாசன்
எனது அப்பா கமல் தான் என் சூப்பர்மேன் என நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார். சுருதிஹாசன் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். சமீபத்தில் இணைய தளத்தில் சுருதியை பற்றி விமர்சித்தவர்களுக்கு, “யார் கிண்டல் செய்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. சமூக வலைத்தளம் மக்கள் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது. அடுத்தவர்களை பற்றி ஏதாவது இதில் சொல்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைத்தளம் தைரியம் அளிக்கிறது. அடுத்தவர்களின் கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. மற்றவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்தால் யாரும் நம் வேலையை ...
Read More »ராஜாவை காப்பாற்ற முனையும் இராஜவரோதயம்….! – கஜேந்திரகுமார்
சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வாய்கிழியக் கத்திக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இன்று ...
Read More »சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை!
சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சிட்னியில் தரையிறக்கப்பட்டது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சீனாவின் ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது. ஏ-330 ஏர்பஸ் வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 265 பயணிகள் இருந்தனர். சிட்னியில் இருந்து புறப்பட்டு விமானம் 70 கிலோ மீட்டர் தூரம் சென்றிருந்தது. அப்போது இடதுபுற என்ஜினில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் ...
Read More »அவுஸ்ரேலியாவில் 4.7 கோடி டாலர்கள் செலவில் தனிச் சிறை!
அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாதிகளுக்கு என்று 4.7 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் தனிச் சிறை கட்ட அரசு தீர்மானித்துள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தியும், தாக்குதலுக்கு திட்டம் தீட்டியும் கைதாகும் நபர்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்கவும், ஆபத்தான தீவிரவாதிகளை கண்டதும் சுட்டுக் கொல்லவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் பரோலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்துவகை சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், அங்கிருக்கும் இதர கைதிகளையும் மூளைச் சலைவை செய்து தீவிராதிகளாக ...
Read More »வடசென்னையில் மூன்று காதாப்பாத்திரங்கள் சமுத்திரகனி!
வடசென்னை படத்தில் சமுத்திரகனி மூன்று காதப்பாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி ...
Read More »ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சிறு மேம்படுத்தல்களுடன் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களை அமைக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகங்களை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அமைப்பது குறித்து உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடையே கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த அலுவலகங்களினூடாக இலவச சட்ட ஆலோசனைகளை காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். மேலும் காணாமல் ...
Read More »அவுஸ்ரேலியா வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி இங்கிலாந்து அணி, வங்கதேசத்தையும் அரைஇறுதிக்கு அழைந்து சென்றது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு அவுஸ்ரேலிய களம் இறங்கியது. இங்கிலாந்து அணி கப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ...
Read More »பறக்கும் டாக்சி
பறக்கும் டாக்சி சேவையை 2020ம் ஆண்டுக்குள் துபாய் மற்றும் டல்லாஸில் உபெர் தொடங்க உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியை பல விமான நிறுவனங்களும் உபெருக்காக தயாரிக்க உள்ளன.
Read More »
Eelamurasu Australia Online News Portal