குமரன்

ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முடியாது!

நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது எமது நோக்கமும் அல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தெரிவுக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களாக சென்றவடைத் தடுப்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை இரவுஇடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ...

Read More »

மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய விஜயசாந்தி!

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்த விஜயசாந்தி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 26-வது படத்துக்கு, சரிலேரு நீக்கெவரு என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அனில் சுங்கரா, தில் ராஜு, மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர். அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தின் மூலமாக, 13 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் விஜயசாந்தி. இது குறித்து அவர் கூறியதாவது:- ‘தெலுங்கில் கிருஷ்ணாவுடன் நடித்த ஹிலாடி கிருஷ்ணுடு எனக்கு ...

Read More »

இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது!

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க். இது பிரேசில், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் இளம் ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லண்டனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை சார்பில் ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தாய்லந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள ‘Ice’ போதைப்பொருள் அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் போதைப்பொருள் ஒலிபெருக்கிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மெல்பர்ன் துறைமுகத்துக்குள் கடத்தப்பட்ட அந்த ஒலிபெருக்கிகளில் 1.6 டன் ‘மெத்’தும் (meth) 37 கிலோகிராம் போதைமிகு அபினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவு ‘மெத்’ இதுதான் என்று எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். X-ray எனப்படும் ஊடுகதிர்ச் சோதனையின்போது, வழக்கத்துக்கு மாறாக ஏதோ இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், ஒலிபெருக்கியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ...

Read More »

மோடியின் முதல் பயணமும் இலக்கும்!

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார். ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது. சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது. அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கும் நிகழ்வு, கடந்த ...

Read More »

அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ அறிமுகம்!

அப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இவை இந்த கம்ப்யயூட்டர் சிறப்பாக செயலாற்றும் வல்லமையை வழங்குகிறது. புதிய மேக் ப்ரோவுடன் 6K HDR மாணிட்டரான ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலையும் ஆப்பிள் அறிமுகம் செய்தது. டிராஷ்கேன் வடிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் காரணமாக 2017 ஆம் ஆண்டே ஆப்பிள் ...

Read More »

சவுதி அரேபியா மன்னரை அவமதித்தாரா இம்ரான் கான்?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் ஆசிசை அவமரியாதை செய்ததாகவும், அவரது நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் ஆசிசை அவமரியாதை செய்ததாகவும், அவரது நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஈரானுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒன்று சேர்க்கும் விதமாக சவுதி அரேபியாவில், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்ந மாநாட்டில் பாகிஸ்தான் ...

Read More »

மல்­வத்து தேர­ருடன் பேச்சு நடத்­துவேன்!

முஸ்லிம் பிர­தி­நி­திகள் தொடர்பில் பௌத்­த­பீ­டங்­களின் தேரர்கள் விடுத்­துள்ள கோரிக்­கை­யுடன் நாங்கள் இணைந்து கொள்­கின்றோம்.  அவ்­வாறு கோரிக்கை விடுத்­த­மைக்­காக நன்றி தெரி­விக்­கின்றோம். அத்­துடன்  மல்­வத்து பீடத்தின்   தேரர்  நியங்­கொட விஜி­த­சி­றியை சந்­தித்து   இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்க்­கின்றேன்  என்று சிறிலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இன ­ரீ­தியில் நாங்கள்  பிரிந்து செயற்­ப­டக்­கூ­டாது. சுதந்­தி­ரத்தின் பின்னர்   முஸ்லிம்   பிர­தி­நி­தி­களும் அங்கம் வகித்­தனர். புலி­களின் யுத்­த­ கா­லத்­திலும் முஸ்லிம் அமைச்­சர்கள் அங்கம் வகித்­தனர் என்றும் அவர் குறிப்­பிட்டார். நேற்று நாடா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில்  ஆளும் கட்சி  ...

Read More »

சிறிலங்காவிற்கு உதவும் 20 அவுஸ்தி­ரே­லிய புலனாய்வாளர்கள்!

ஈஸ்டர் ஞாயிறு தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான  விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20 புல­னாய்வு நிபு­ணர்­களை சிறிலங்காவிற்கு  அனுப்­பி­யி­ருப்­ப­தாக, அந்த நாட்டின் உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரி­வித்தார்.   சிறிலங்காவிற்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த அவர், செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே இந்த தக­வலை வெளி­யிட்டார். ”தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீ­லங்கா புல­னாய்வுக் குழுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20இற்கும் அதி­க­மான புல­னாய்வு அதி­கா­ரி­களைக்கொண்ட குழு­வொன்றை இங்கு அனுப்­பி­யுள்­ளது. அவர்கள் இப்­போதும், இலங்கை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றனர். குறிப்­பாக தட­ய­வியல் பக்­கத்தில் ...

Read More »

அவுஸ்திரேலிய துப்பாக்கிதாரி யார்?

கடந்த மூன்று  நாட்களுக்கு முன்னர் டார்வின் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் துப்பாக்கிதாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. டார்வினில் தாக்குதல் நடத்திய நபர் நகரத்தின் மதிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காத காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நபர் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தாயார் வேலைத்தளத்துக்கு அழைப்பெடுத்து தனது மகனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி உதவுமாறு கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. 45 வயதான குறிப்பிட்ட நபர் இந்த வருட ஆரம்பத்தில் ...

Read More »